தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

மகிந்த ராஜபக்சவை எமது நாட்டில் உள்ள முட்டாள் கூட்டங்களே மகாராஜாவாக மாற்றியது: ராஜித சேனாரத்ன

சம்பிக்க ஜனாதிபதியாக வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 06:13.57 AM GMT ]
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி சம்பந்தமாக பிரதமரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பதாக எழுத்தாளர் காமினி வியங்கொட அண்மையில் தெரிவித்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகும் யோகம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியதன் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் வியங்கொட கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சிலரது ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியங்கொட, சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக அவதூறு பேசி வருவதாக கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு நாட்டின் ஜனாதிபதியாகும் தகுதிகள் இருக்கின்றன. அவர் நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
ஏனைய அனைவரையும் விட ஜனாதிபதி பதவிக்கு  சம்பிக்கவே மிகவும் பொருத்தமானவர். அத்துடன் சம்பிக்க ரணவக்கவை எந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை ஜாதிக ஹெல உறுமயவும் நாட்டு மக்களும் தீர்மானிப்பார்கள் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ராஜித குடும்பத்திற்கு எதிரான வழக்கு நீதவான் நீதிமன்றிற்கு மாற்றம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 06:17.06 AM GMT ]
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது மனைவி, மற்றும் அவரின் இளைய மகன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
வயது குறைந்த சிறுமியை பலவந்தமாக கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதும், அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் சட்டத்தரணிகள் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்பு விஜயம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 06:42.16 AM GMT ]
முதன்முiறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பஸ்கா பண்டிகையில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம் இப்பண்டிகையை ஏற்பாடு செய்துள்ளது. போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெறும். இப்பண்டிகை விழாவில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று 2ம் திகதி ஆரம்பமாகும் பஸ்கா பண்டிகை எதிர்வரும் 5ம் திகதிவரை நடைபெறவுளளது.இலங்கையில் நடைபெறும் 3 வது பஸ்கா பண்டிகை இதுவாகும்.முன்னர் கொழும்பு கண்டி ஆகிய மாவட்டங்களில் இப்பண்டிகை இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மைத்திரிபால இம்மாவட்டத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இலங்கையிலேயேமிக அதிக வீத வாக்களிப்பு இடம்பெற்ற மாவட்டம் மட்டக்களப்பாகும்.
இம்மாவட்டத்தில் அவருக்கு 86.2வீத வாக்க்குகள் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மகிந்த ராஜபக்சவை எமது நாட்டில் உள்ள முட்டாள் கூட்டங்களே மகாராஜாவாக மாற்றியது: ராஜித சேனாரத்ன
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 06:50.53 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை இதுவரை அறியவில்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
அவர் சர்வாதிகாரத்தை நோக்கி சென்றமையே அவரின் தோல்விக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை புகழ்ந்து மகாராஜா என்ற பாடல் எழுதப்பட்டது.
அவர் வாகனத்தில் பயணிக்கு போது அந்த பாடலை கேட்பார். வாகனத்தை ஓட்டும் சாரதிகளும், தாம் மிகவும் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதான் என்று கூறுவார்கள்.
எமது நாட்டில் உள்ள சில முட்டாள் கூட்டமே, மக்கள் மத்தியில் வசிகரம் பெற்ற மற்றும் நாங்கள் உறவு பாராட்டிய அரசியல்வாதியான மகிந்த ராஜபக்சவை, மகாராஜாவாக மாற்றியது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp4J.html

Geen opmerkingen:

Een reactie posten