[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:41.49 AM GMT ]
இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.
இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திரு ப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp5I.html
ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:34.01 AM GMT ]
ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வந்த 36 வயதான ரணவீர 9 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த மரணம் குறித்த விசாரணை இதற்கு முன்னர் அத்தனகல்ல பதில் நீதவான் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
நோயேல் ரணவீர 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி ரஷ்ய நகர் ஒன்றில் உள்ள ஹொட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.
தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ரணவீரவின் தாயான 71 வயதான ஜீ.ஏ. ஜெசப்பீன் நோனா, அவரது சட்டத்தரணி உபாலி குமாரசிங்க ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி, நோயேல் ரணவீர, ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஹொட்டல் ஒன்றில் 202 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
உதயங்க வீரதுங்க, 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நோயேல் ரணவீர, உதயங்க வீரதுங்கவின் செயலாளராகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் நியமிக்கப்பட்டதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நோயேல் ரணவீர ரஷ்யாவில் திடீரென இறந்து போனதாகவும் அவரது உடலை இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வீரதுங்க, ரணவீரவின் குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தார்.
மரணத்திற்கான காரணங்களை அறிய ரணவீரவின் குடும்பத்தினர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உதயங்க வீரதுங்க அந்த முயற்சிகளை முறியடித்துள்ளதுடன், 2014 ஜூன் மாதம் 18 ஆம் திகதி வெலிகடைமுல்லயில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த மரணத்தின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினரான உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அத்தனகல்ல வெலிகடைமுல்ல பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த அவரது உடல் விசாரணைக்காக இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp5H.html
Geen opmerkingen:
Een reactie posten