தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய 8 கி.சே.பிரிவுகள் புதுவருடத்தன்று விடுவிக்கப்படும்! அரச அதிபர்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 03:00.43 PM GMT ]
மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய 8 கி.சே.பிரிவுகள் புதுவருடத்தன்று விடுவிக்கப்படும்! அரச அதிபர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 03:00.36 PM GMT ]
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்;ட 8 கிராம சேவையாளர் பிரிவுகள் எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருட தினத்தன்று விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலப்பிரப்பின் மிகுதியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி.வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பகுதிகள் மற்றும் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்படுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
ஏற்கனவே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள வளலாய் மற்றும் வசாவிளான் பகுதியில் குடியேறிய மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு பல அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளது.
அது போன்று அப்பகுதிகளுக்கான மின்சார இணைப்புகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.
மேலும் எதிர்வரும் காலங்களில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்து.
இதன்படி ஏற்கனவே வசாவிளானில், வளலாய் பகுதிகளில் முறையே 197, 233 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான கையளிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் புதிய அரசாங்கத்தினால் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து 1000 ஏக்கர் விடுவிப்பதாக விடுக்கப்பட்ட அறிவிப்பின்படியே நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 1000 ஏக்கரில் எஞ்சியுள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பும் தற்போது விடுவிப்பதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்படும் பகுதிகள் 8 கிராம சேவர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.
குறித்த பகுதிகளில் நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் எதிர்வரும் 7ம் திகதி அப்பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடவுள்ளனர்.
இவ்வாறு பார்வையிட்ட பின்பே எந்த எந்த கிராம சேவகர் பிரிவுகள் விடுவிகக்ப்படும் என்று உறுதியாக சொல்ல முடியும்.
இதன்பின்னர் எதிர்வரும் 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று மக்களுடைய காணிகள் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என்றும் அவர் மெலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq5H.html


Geen opmerkingen:

Een reactie posten