[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 05:47.07 PM GMT ]
இது தொடர்பாக தெரியவருவதாவது,
நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33 மீனவர்கள் 5 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர்.கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் எனவும் படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் நாகையில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் படியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்து 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq6B.html
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டால் 2 வருட சிறை?
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 03:12.21 PM GMT ]
அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும்.
அவ்வாறு கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq5J.html
Geen opmerkingen:
Een reactie posten