தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

இலங்கையில் போருக்கு பின்னர் 5வருடங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தோல்வி!- அமெரிக்கா

உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அம்பலம்

0
obamaஇந்தத் தலைவர்கள் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார்கள். அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், இவர்களது தகவல்களை தவறுதலாக ஆசிய கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இந்தத் தகவல்களில் கடவுச்சீட்டு இலக்கங்கள், விசா விபரங்கள் போன்றவை அடங்கியிருந்ததாகத் தெரிகிறது. இது சர்வதேசத் தலைவர்களின் அந்தரங்கத்தை மீறும் நடவடிக்கை என இராஜதந்திர வட்டாரங்கள் சாடுகின்றன.
தகவல் கசிவு விவகாரத்தில் முக்கியமான விடயம் யாதெனில், பிரிஸ்பேனில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற சமயம், தமது தகவல்கள் கசிந்த விடயம் எந்தவொரு தலைவரும் அறியாதிருந்தமை தான்.
World 01World
- See more at: http://www.canadamirror.com/canada/40380.html#sthash.pU48aVkI.dpuf


இலங்கையில் போருக்கு பின்னர் 5வருடங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தோல்வி!- அமெரிக்கா

0
போருக்கு பின்னரான 5 வருடங்களில் அந்த நல்லிணக்கத்தை அரசாங்கத்தினால் எட்டமுடியவில்லை.
எனினும் அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு புதிய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கான உதவிச்செயலாளர் டொம் மாலினொவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் உலகில் இன்று பலதரப்பட்டநிலையில் பயங்கரவாதம் நிலவுகிறது.
மக்களை காப்பாற்றுவதாக கூறி இந்த பயங்கரவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் இந்த பயங்கரவாத செயல்களால் மக்களை காப்பாற்ற முடியாது.
எல்லாத் தரப்பும் பிழைகளுக்கான பொறுப்பை ஏற்று செல்லும் போது இனங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்கத் திட்டங்களுக்கு உதவத் தயார் என்றும் அமெரிக்க அதிகாரி உறுதியளித்துள்ளார். 
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும், அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை, அமெரிக்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
நாட்டுக்கு விஜயம் செய்துள்ள எட்டு பேரைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அமெரிக்க மனித உரிமை பிரதிநிதிகள் போரின் பின்னரான இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போரின் பின்னர் நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
மனித உரிமை மேம்பாடு குறித்து புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/40394.html#sthash.ybNRj8iP.dpuf

Geen opmerkingen:

Een reactie posten