சில உண்மைகள் வெளியே வராது அப்படியே இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஈழத் தமிழர்களின் பல விவகாரங்கள் இவ்வாறு நடந்துள்ளது. இப்படி ஒரு விடையம் நடந்ததா ? என்று எவருக்குமே தெரியாமல் போன விடையம் ஒன்றை இதோ வாசகர்களுக்காக நாம் தருகிறோம்.
2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் போர் உக்கிரமாக நடந்துகொண்டு இருந்த வேளை அது. மே 16 கடலில் ஒரு பாரிய உடைப்பைச் செய்ய புலிகள் திட்டம் தீட்டி இருந்தார்கள். 3 அடுக்குகளாக கடல் படையினர் முள்ளிவாய்க்கால் கடலில் நின்றிருந்தார்கள். போதாக்குறைக்கு இந்திய கடல்படையினரை சோனியா நிறுத்தியும் வைத்திருந்தார். இதேவேளை ஆந்திராவில் இருக்கும் , நெல்லூர் என்னும் இடத்தில் மே மாதம் 1ம் திகதி முதல் வெடிமருந்துகள் சேகரிக்கப்பட்டு வந்துள்ளது. அண்டைய மாநிலங்கள் , கிராமங்கள் என்று பல இடங்களில் , இருந்துவந்த வெடி பொருட்களின் எடை சுமார் 5,000 KG மை தாண்டும் என்கிறார்கள்.
இதனை 2 பகுதியாக பிரித்து , ஒரு கண்டேனரில் ஏற்றிச் சென்று முள்ளிவாய்க்கால் கடலில் வைத்து வெடிக்க வைக்க புலிகள் அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டு இருந்தார்கள். இதுபோன்ற பாரிய வெடிப்பு ஒன்று கடலில் ஏற்பட்டு இருந்தால் நிச்சயம் இலங்கை கடல்படைக்கு பாரிய இழப்பு வந்திருக்கும். 5,000 கிலோ எடையுள்ள வெடிபொருள் கடலில் வைத்து வெடித்திருந்தால் அதன் அமுக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இதனூடாக ஒரு கடல் வழியை புலிகள் ஏற்படுத்த முனைந்தார்கள். விடுதலைப் புலிகளின் இறுதிக்கட்ட தாக்குதல் திட்டத்தில் இதுவும் ஒன்று.
ஆந்திராவில் நெல்லூரில் சேர்க்கப்பட்ட 5000 கிலோ வெடிபொருட்களையும் அவர்கள் இலங்கை கடல் பரப்பினுள் நகர்த்த முன்னரே, இந்திய உளவுத்துறையினர் குறித்த நபர்களை கைதுசெய்து விட்டார்கள். இந்தியாவின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததே இல்லை எனலாம். இவ்வளவு தொகையான வெடிபொருட்களை இந்திய உளவுத்துறையினர் இதுவரை கைப்பற்றியதே இல்லை. வெடிபொருட்களை சேகரித்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை அவர்கள், ரகசியமாக ஒரிசாவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்று இன்றுவரை சிறையில் அடைத்துள்ளார்கள். தமிழ் நாட்டில் அல்லது ஆந்திராவில் சிறையில் அடைத்தால் அவர் ஒருவேளை தப்ப வாய்ப்புகள் உண்டு. எனவே தான் ஒரிசாவில் அவரை தடுத்து வைத்துள்ளார்கள்.
இதன் காரணமாகவே 16ம் திகதி அதிகாலை கடலில் நடத்தப்படவிருந்த பாரிய தாக்குதல் ஒன்று நடைபெறாமல் போனது என்று கூறப்படுகிறது. எமது போராட்டத்திற்காக பல உதவிகளை செய்து , தம்மை வருத்தி , தமது வாழ்கையை தியாகம் செய்து இன்றுவரை ரகசிய சிறைகளில் அடைபட்டு உள்ளவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம் !
போராளியின் குறிப்பில் இருந்து.
http://www.athirvu.com/newsdetail/2726.html
Geen opmerkingen:
Een reactie posten