தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

மைத்திரியின் ஆட்சியைக் கவிழ்க்க கறுப்பு பணத்தை செலவிடும் மகிந்த

ஜனாதிபதி நாளை மறுதினம் பாகிஸ்தானுக்கு விஜயம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 12:14.53 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 5 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.
ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி மாமூன் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  அத்துடன் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் உத்தியோகர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் ஆட்சியைக் கவிழ்க்க கறுப்பு பணத்தை செலவிடும் மகிந்த
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 11:53.58 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கறுப்பு பணத்தை நீர்போல் செலவிட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றுக்கொண்டதால், மகிந்த ராஜபக்சவின் அதிகார பேராசை கனவு கலைந்து போயுள்ளது.
இதனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்களை இணைத்து கொண்டு மைத்திரி அரசாங்கத்தை வீழ்த்த கறுப்பு பணத்தை கொட்டி வருவதாக தெரியவருகிறது.
இந்த பணிகள் மகிந்த ராஜபக்சவின் பிரபல ஒப்பந்தகாரர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் தமது பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தில் அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்களிடம் பேரம் பேசும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq4J.html

Geen opmerkingen:

Een reactie posten