தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

இலங்கைக்கு காசு அனுப்புவது என்றால் இப்பவே அனுப்புவது நல்லது: பவுன்ஸ் வீழ்ச்சியடையலாம் !

10 இலங்கையர்கள் பிரித்தானிய இராணுவத்தில் கடமையாற்றி வருகின்றனர் !

[ Sep 14, 2014 09:11:08 PM | வாசித்தோர் : 5635 ]
பத்து இலங்கையர்கள் பிரித்தானிய இராணுவத்தில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் இந்த தகவல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் எனா சொப்ரீயினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இலங்கையர்கள் பிரித்தானிய இராணுவத்தில் கடமையாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து பிரித்தானியாவில் குடியேறியவர்களா ? இல்லை பிரித்தானியாவில் பிறந்த இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பான தவல்கள் எதுவும் வெளிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/989.html

இலங்கைக்கு காசு அனுப்புவது என்றால் இப்பவே அனுப்புவது நல்லது: பவுன்ஸ் வீழ்ச்சியடையலாம் !

[ Sep 14, 2014 09:26:04 PM | வாசித்தோர் : 12285 ]
பிரித்தானியாவை ஐக்கிய ராட்சியம் என்று அழைப்பார்கள். பிரித்தானியா, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய தனி மாநிலங்கள் ஒன்றினைத்து, ஐக்கிய ராட்சியமாக மாறியுள்ளது. இதில் ஸ்காட்லாந்து சுமார் நீண்ட வருடங்களாக தாம் பிரிந்து செல்லவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும் அங்கு வாழும் மக்கள், அதனை விரும்பவில்லை. அடிக்கடி சில அரசியல்வாதிகள் மட்டுமே தற்போது பிரிந்துசெல்லவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தற்போது ஸ்காட்லாந்தில் ஒரு தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது பிரிந்து செல்வதா ? இல்லை இணைந்து இருப்பதா என்று மக்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.
இதுபோன்ற தேர்தல் முன்னரும் நடைபெற்றுள்ளது. ஆனால் மக்கள் பிரிந்து செல்லக்கூடாது என்று வாக்களித்தார்கள். ஆனால் இம்முறை சாலமண்டி என்னும் ஸ்காட்லாந்து, அரசியல்வாதியின் கைகள் ஓங்கியுள்ளது. அவர் மிகவும் பிரபல்யமான ஒரு அரசியல்வாதி. அவர் பிரிந்துசெல்லவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதனால், பல மக்கள் அவரை பின்பற்றுகிறார்கள். இவருக்கும் சீனாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய ராட்சியத்தை உடைக்கவே சீனா , இந்த தலைவருக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. நடக்கவுள்ள தேர்தலில் ஒருவேளை ஸ்காட்லாந்து மக்கள் பிரிந்து செல்லவேண்டும் என்று வாக்களித்தால்.
ஸ்காட்லாந்து தனி நாடாக மாறி ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணையும். இதனால் ஸ்காட்லாந்தில் உள்ள பல வியாபார நிலையங்கள், பெரும் பங்குச் சந்தைகள், வணிக நிறுவனங்கள், கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் அனைத்தும் பிரித்தானியாவின் கைகளை விட்டுப் போகும் அபாயம் தோன்றியுள்ளது. இதனால் பிரித்தானிய ஸ்டேலிங் பவுன்ஸ் பெரும் வீழ்ச்சியடையால் என்று பலராலும் எதிர்வு கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜப்பான், சீனா, என பல நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தம்மிடம் உள்ள ஸ்டேலிங் பவுன்ஸை, வேறு நாட்டு நாணயமாக மாற்றுகிறது. இது இலங்கையருக்கும் பொருந்தும். தற்போது நீங்கள் இலங்கைக்கு காசு அனுப்பினால், அங்கே எவ்வளவு காசு கொடுப்பார்களோ அதன் அளவு இன்னும் சில வாரங்களில் அது வீழ்ச்சியடையலாம். எனவே இலங்கைக்கு தனமது உறவுகளுக்கு பணம் அனுப்ப நினைப்பவர்கள், இப்போதே அனுப்பிவிடுவது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/990.html

Geen opmerkingen:

Een reactie posten