ஜப்பான் பிரதமரை வைத்து காய் நகர்த்த முனையும் மகிந்த ராஜபக்ஷ: ஏற்றுக்கொள்வாரா ?
[ Sep 08, 2014 06:12:09 AM | வாசித்தோர் : 2515 ]
ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கை சென்றுள்ளார். விமானநிலையம் சென்று செங்கம்பள வரவேற்ப்பை கொடுத்துள்ளார் மகிந்தர். மேலும் ஜப்பான் பிரதமரை இலங்கை பாராளுமன்றம் அழைத்துச் சென்று, அங்கேயும் உரையாற்ற விட்டு, பெரும் வரவேற்ப்பை அள்ளி வழங்கியுள்ளார். இன் நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேனை இவ்வருடத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கவும் என, மகிந்தர் ஜப்பானிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்கள், அல் ஹுசேனுடன் நீண்ட நாட்களாக நட்பில் உள்ளவர் என்பது பலராலும் அறியப்பட்ட விடையம் ஆகும். ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷ அல் ஹுசேனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவரே அதனைக் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மேலும் மகிந்தரை சந்திக்க மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசேன் விரும்பவும் இல்லை. இதனால் ஜப்பான் பிரதமர் ஊடாக தனது காயை நகர்த்த மகிந்தர் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பலிக்குமா மகிந்தரின் பாச்சா ?
http://www.athirvu.com/newsdetail/946.htmlநவநீதம் பிள்ளைபோல விடாப்பிடியாக நிற்கும் அல் ஹூசெய்ன் : மாட்டித் தவிக்கும் மகிந்தர் !
[ Sep 08, 2014 06:18:58 AM | வாசித்தோர் : 5235 ]
நவநீதம் பிள்ளை தான் இலங்கைக்கு எதிராக செயல்படுகிறார் என்று மகிந்தரின் அரசு குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள, ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளரும் ஜோர்தான் இளவரசருமான அல் ஹூசெய்ன் இலங்கைக்கு சார்பாக நடப்பார் என்று மகிந்த அரசு கருதியது. ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஐ.நாவின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரும் ஜோர்தான் இளவரசருமான அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அவர் கவலை வௌியிட்டுள்ளார். இதேவேளை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 27வது அமர்வுகள் நாளை (08) ஆரம்பமாகி 26ம் திகதி வரை இடம்பெறவுள்ளன. முன்னதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்த நவனீதம் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியுடன் விடைபெற்றதை அடுத்து, புதிய ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் அல் ஹூசெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவனீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் பாராபட்சமாக செயற்பட்டதாகவும், அல் ஹூசெய்ன் அவ்வாறு செயற்படமாட்டார் எனவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அண்மையில் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/947.html
Geen opmerkingen:
Een reactie posten