தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மீட்பு!

யாழ்- கொழும்பு பஸ்ஸில் கஞ்சா கடத்திய மூவர் கைது! - கணனி திருடிய இருவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 09:14.29 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்றில் எடுத்து வரப்பட்ட 13 கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி, நடத்துனர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பஸ் ஒன்றை சோதனையிட்ட போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மட்டு ஏறாவூரில் அலைபேசி, கணினி திருடிய இருவர் கைது
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 5ஆம் குறிச்சி பஸார் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றிலிருந்து திருட்டுப்போன 25 அலைபேசிகளையும் மடிக்கணனி ஒன்றையும் கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர்கள் இருவரை சனிக்கிழமை இரவு கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.
இந்த விற்பனை நிலையத்திலிருந்து கடந்த ம் திகதி 119,400 ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் மடிக்கணனி திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாம் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் ஏற்கெனவே போதைப்பொருள் விவகாரத்தோடு தொடர்புடையவர்கள் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரமவின் வழிகாட்டலில், குற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹிரன் செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர்.புருஷோத்தமன், எச்.எம்.எல்.அபேசிங்ஹ, பொலிஸ் சார்ஜன்ட் எம்.நஜிமுதீன், ஈ.எல்.பதூர்தீன், கே.எம்.றபீக், ஆர்.எம்.பண்டிதரெட்ன, எச்.பி.ஜயந்த, ஜி.தர்மசேன ஆகியோர் அடங்கிய குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeoz.html
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை அடக்க வேண்டும் இல்லையேல் உலக போர் வெடிக்கும்!- சம்பிக்க ரணவக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 09:50.56 AM GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை உலகில் அடக்க வேண்டும் எனவும் இல்லாது போனால் உலகில் சகல கிராமங்கள், நகரங்களில் வஹாப் அடிப்படைவாதிகள் துப்பாக்கியை கையில் எடுத்து ஆரம்பிக்கும் உலக போர் வெகு தொலைவில் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகில் உள்ள 80 நாடுகள் இந்த பயங்கரவாதிகளுடன் போரிட்டு வருகின்றன. இதற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொறுப்புக் கூறவேண்டும்.
இஸ்ரேல், நைஜீரிய நாடுகளில் பொக்கோ ஹராம், ஆப்கானிஸ்தானில் தலிபான், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ், மலேசியா, இந்தோனேசிய நாடுகளில் ஜம்மிய இஸ்லாமியா, இந்தியாவில் லக்ஸ் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளும், சூடான் மற்றும் சிரியா போன்ற நாடுகளை அராஜக நிலைமைக்கு கொண்டு செல்ல வஹாப் வாதத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் முழு உலகிலும் செயற்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் காரணமாகவே இந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் உருவாகி செயற்பட்டு வருவதாக சிலர் கூறுகின்றனர்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் தமது பொருளாதார, அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நோக்கில் நாடுகளை அராஜக நிலைக்குள் தள்ள பல நாடுகளில் உள்ள பல்வேறு குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள எண்ணெய் வளத்திற்காகவே அமெரிக்கா ஈராக்கின் பாத் என்ற சமவுடமை கட்சியை அழித்து சதாம் ஹூசைனை அடக்கியது.
இதற்காக அந்த நாட்டில் இருந்த குழுக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தது. தற்பொழுது அந்த குழுக்களுக்கு எதிராக குண்டு தாக்குதலை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தலைவிதியை ஏற்படுத்தும் செயற்பாடு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeo0.html
நெடுந்தீவில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 10:19.22 AM GMT ]
நெடுந்தீவு கரை ஒதுங்கிய இந்திய மீனவர் ஒருவரின் சடலத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து கடற்படையினர் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரத்தை சேர்ந்த 75 வயதான மீனவரின் சடலமே இவ்வாறு இலங்கையின் நெடுந்தீவில் கரை ஒதுங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 6 ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட கடலுக்கு சென்றிருந்த நிலையில், அவர் காணாமல் போயிருந்தார்.
அதிமுகவின் சின்னத்தை அவர் உடலில் பச்சை குத்தியிருந்ததால், மீனவரை அடையாளம் காணமுடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்- 100 வலைகள் நாசம்
இலங்கை கடற்படையினர் தமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சுமார் 100 வலைகளை நாசம் செய்துள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை இந்திய எல்லைப்புற கடலில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்தே இலங்கை கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்காரணமாக மீனவர்கள் கரைதிரும்பும்போது எவ்வித மீன்களும் இன்றியே திரும்பியதாக இராமேஸ்வர மீனவ சங்க தலைவர் டி சேசுஸ்ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழக மீனவர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeo1.html

Geen opmerkingen:

Een reactie posten