தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

மக்காவில் முஸ்லிம் யாத்திரிகர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்: அமைச்சர் பௌசி!

அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் 18வது திருத்தச் சட்டம்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 07:34.02 AM GMT ]
18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டத்தின் குறைபாடுகள் காரணமாக மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமுடியாது என முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தொழில்சார் அமைப்புகளும் கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றன.
அத்துடன் இந்த பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
18வது திருத்த சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷ, மூன்றாவது தடையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால், வழக்கு தொடரப்படும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உரிமை இருப்பதாக அரசாங்கத்திற்கு ஆதரவான சிரேஷ்ட சட்டத்தரணியான கோமின் தயாசிறி கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாகவும் இதனால், மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வாதங்களை தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக போட்டியிட முடியும் மற்றும் முடியாது என்று வாதங்களை முன்வைக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ள வேண்டிய பாரதூரமான பிரச்சினை ஒன்று இருப்பதாக தோன்றுகிறது.
சாதாரணமான இப்படியான சிக்கல்களை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் திருத்தங்கள் மூலமே அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், அரசாங்கம் அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள அக்கறை செலுத்தாமல் இருப்பது சட்டதுறையினரின் சந்தேகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இப்படியான சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றம் சட்ட விளக்கங்களை வழங்க முடியும் என்றாலும் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் ஒன்றில் குறைபாடுகள் இருக்குமாயின் 18வது அரசியல் அமைப்புத் திருத்த சட்டத்தை மீண்டும் திருத்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ளுமாறு அறிவிக்க மாத்திரமே நீதிமன்றத்திற்கு முடியும்.
எது எப்படியிருந்தாலும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு மகிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால், அரசாங்கத்தின் புதிய வேட்பாளருடன் 2016 ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUho3.html
மக்காவில் முஸ்லிம் யாத்திரிகர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்: அமைச்சர் பௌசி
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 07:35.12 AM GMT ]
இந்த முறை ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு சென்ற இலங்கையின் முஸ்லிம் யாத்திரிகர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஏ எச் எம் பௌசி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து ஜெட்டாவுக்கு முதல்கட்டமாக 48 முஸ்லிம் யாத்திரிகள் நேற்று சென்றடைந்தமையின் பின்னரே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 3200 இலங்கை யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டா அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் மக்காவில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் காரணமாக இந்த முறை அது 20வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் இலங்கை யாத்திரிகளின் உணவு உடை மற்றும் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு அவர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளதாக அமைச்சர், அரப் நியூஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUho4.html

Geen opmerkingen:

Een reactie posten