[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 12:21.58 AM GMT ]
இலங்கையில் சஹரிய சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அடிப்படைவாத கொள்கைகளை மையமாகக் கொண்ட ஷரிஆ சட்டங்கள் இலங்கைக்கு பொருந்தாது என அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர், சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில், உள்நாட்டு சட்டங்கள் மட்டுமே அமுல்படுத்தப்படும்.
பாகிஸ்தானின் மதரஸா பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கு சமாந்தரமாக சஹரிய சட்டங்களை போதிக்கும் பாடசாலையொன்றை ஆரம்பிக்க கிழக்கு அரசியல்வாதி ஒருவர் முயற்சித்து வருகின்றார்.
இந்த நடவடிக்கையானது உள்நாட்டில் அடிப்படைவாதத்தை போசிக்கும் முயற்சியாகும்
.ஷரிஆ சட்டங்களை போதிக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
அல்-கெய்தாவின் கிளை இந்தியாவிலும் இயங்குகிறது : அல்ஜெசீரா
இந்தியாவிலும் தமது கிளை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அல்- கெய்தா அறிவித்துள்ளது.
அல்-கெய்தாவின் தலைவர் ஐமான் அல் ஸவாஹரி இதனை நேற்று அறிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டத்தை சர்வதேசமயப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் முஸ்லிம் சனத்தொகையை உடைக்கும் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் அதனை தடுக்கவே புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சி இன்று அல்ல இரண்டு வருடங்களுக்கு முன்னரே முஜாஹஜிதீன் இயக்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அல்-கெய்தாவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒசாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு அமெரிக்க கொமாண்டோக்களால் கொல்லப்பட்ட பின்னர் ஐமான் அல் ஸவாஹரி அதன் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkxy.html
ஐ.தே.கவிலிருந்து விலக்கியவர்களை மீள இணைத்துக்கொள்ள விசேட குழு!- வாஸ் குணவர்தனவின் வீட்டிற்கு கைக் குண்டு தாக்குதல்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 02:02.38 AM GMT ]
ஒழுக்காற்று நடவடிக்கைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீள இணைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு மேன்முறையீட்டு கமிட்டியொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உரிய விளக்கத்தை அளித்து கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீள இணைந்துகொள்ள முடியும் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் கருணாசேன கொடிதுவக்கு தலைமயில் இந்தக் குழு நிறுவப்பட்டுள்ளது.
வாஸ் குணவர்தனவின் வீட்டிற்கு கைக் குண்டு தாக்குதல்
சிறையில் தற்போது இருக்கும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் தெஹிவளை இல்லத்தின் மீது இன்று அதிகாலையில் கைக்குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெஹிவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குண்டு வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx1.html
ஜனாதிபதியே எனக்கு முன்மாதிரி: கோத்தபாய ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 02:27.02 AM GMT ]
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா யூத் நாடாளுமன்றின் 10ம் அமர்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒர் விடயத்தை எடுத்துக் கொண்டால் அதில் முடிவு காணும் வரையில் ஓய மாட்டார்.
எந்த அழுத்தங்களுக்கும் அடி பணியாது தைரியமாக எடுத்த அரசியல் தீர்மானங்களினால் போர் வெற்றி கொள்ளப்பட்டது.
இளைஞர் ஓர் கனவை உருவாக்கி அதன் பின் செல்லும் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இராணுவத்தில் நான் மிகவும் மரியாதை செய்யும் தலைவர் ஜெனரல் விஜய விமலரட்னவாகும். சாதாரண படைவீரர்களைக் கொண்டு எவ்வாறு சவால்களை வெற்றிகொள்வது என்பதனை அவர் புரிந்து வைத்திருந்தார்.
படையினர் எந்தவொரு பணியையும் மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்கின்றனர். இதனால் பல பகுதிகளிலிருந்தும் இராணுவத்திடம் சில பொறுப்புக்களை ஒப்படைக்குமாறு கோரப்படுகின்றது.
எனினும், இவ்வாறு சாதாரண விடயங்களில் படையினரை ஈடுபடுத்துவது பொருத்தமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx2.html
ஊவாவில் பொலிஸார் பக்கச்சார்பாக நடப்பதாக பெப்ரல் குற்றச்சாட்டு- ஐ.தே.கவினரிடையே மோதல்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 02:42.59 AM GMT ]
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தல்கள் ஆணையாளரும் பொலிஸ் மா அதிபரும் வன்முறைகளை கட்டுபடுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் சில பொலிஸ் அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக குற்றம் சுமத்தினார்.
இது குறிப்பாக மொனராகலையில் இடம்பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொனராகலையில் அரசியல் செல்வாக்கு உச்சக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அரசாங்க அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஹெட்டியாராச்சி கூறினார். இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட்ட புத்திஜீவிகள் அமைதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களை பிரசித்தப்படுத்த அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை முன்கொண்டு செல்வதாகவும் ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் மத்தியில் மோதல் ஒருவர் காயம்
ஊவா மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் ஒன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரது ஆதரவாளார்கள் மற்றும் ஒரு வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான கருணாரட்ன ஜயசூரிய என்பவரின் மகன் காயமடைந்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்றிருக்கலாம் என்று குறித்த வேட்பாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx3.html
பா.ஜ.கட்சியின் பொறுப்பில் இல்லாத சுப்பிரமணிய சுவாமி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை!- பொன்.ராதாகிருஷ்ணன்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 02:44.28 AM GMT ]
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு பதிலளிக்கலாம். கட்சியில் பொறுப்பில் இல்லாத சுப்பிரமணிய சுவாமி மீனவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்படும் மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்த தீர்வு காணப்படும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx4.html
Geen opmerkingen:
Een reactie posten