தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

லண்டன் நியூ-மோல்டனில் காவடி எடுத்த நபரை துணியால் போத்து அடித்த ரவுடிக் கும்பல் !

ஒன்றாக உட்கார்ந்து கும்மியடித்த மகிந்தரும் எதிர் கட்சி தலைவர் ரணிலும் !

[ Sep 09, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3300 ]
இலங்கையின் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், அதிபர் மகிந்தரும் கல்கிசையில் ஒன்றாக ஒரு வீட்டில் உட்கார்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். இவர்கள் அங்கேயே மதிய போசன விருந்தையும் உண்டு , இரகசியமாக பல விடையங்களை பேசிச் சென்றும் உள்ளார்கள். ஒருவரை ஒருவர் வரவேற்று , சிரித்த முகத்தோடு கட்டி அணைத்துக் கொண்டார்கள். நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் மறைந்த, ஷான் விஜயசிங்கவின் 7 நாள் புண்ணிய நிகழ்வுகள், கல்கிஸையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை(8) இடம்பெற்றது.
இதன்போது தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. புண்ணிய நிகழ்வு என்ற போர்வையில் இவை அனைத்தும் நடந்து முடிந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/956.html

அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ் - அனுபவமற்ற சாரதி - புரண்டது கொழும்பு பஸ் - சிறுவன் பலி !

[ Sep 09, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4305 ]
மட்டுவில் கனகம்புளியடிக்கு அருகில் சற்று முன் கொழும்பு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் அந்த இடத்திலேயே பரிதாபகரமான முறையி்ல் நசுங்கிப் பலியானான். பலா் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனா். யதுசன் எனும் பெயரைக் கொண்ட NP7791 எனும் இலக்க பேரூந்தே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. குறித்த பேருந்து வழித்தட அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் களவான பாதையில் பயணத்தை மேற்கொண்டே விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இன்று பெறுமதி மிக்க ஒரு இளம் சிறுவனின் உயிர், காசு ஆசை பிடித்த பேரூந்து உரிமையாளராலும் சாரதியாலும் பறிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இவ்வாறான அநியாய இழப்புக்கள் ஏற்படாது இருப்பதற்கு பயணிகளாகிய நீங்களும் உறுதுணை புரியவது அவசியம். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளும் மிக முக்கியமான அறிவுறுத்தல் என்னவெனின் இவ்வாறான வழி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்து உங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் பயணம் செய்யப் போகும் பேருந்து வழி அனுமதிப்பத்திரம் உள்ளாதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். வழி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத பேரூந்துகளைப் பற்றி பொலிசாருக்கு தெரியப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அவ்வாறு வழி அனுமதிப்பத்திரம் இல்லாத பேரூந்துகளுக்கு பயணிகளைச் சோ்க்கும் முகவா் நிலையங்களையும், பொலிசாருக்கு தெரியப்படுத்திக் கொள்ளுங்கள்.


http://www.athirvu.com/newsdetail/957.html

லண்டன் நியூ-மோல்டனில் காவடி எடுத்த நபரை துணியால் போத்து அடித்த ரவுடிக் கும்பல் !

[ Sep 09, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 18580 ]
நேற்று முன் தினம்(ஞாயிறு) லண்டனில் நியூமோல்டன் என்னும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில், தேர் திருவிளா நடந்துள்ளது. சாமி வெளிவீதி வர அங்கே பல பக்த்தர்கள் காவடியும் எடுத்துள்ளார்கள். இன் நிலையில் திடீரென காரில் வந்து இறங்கிய ரவுடிகள் சிலர், காவடி எடுத்த நபரை துணியால் போத்து சரமாரியாக தாக்கியுள்ளார்கள். யார் யாரை அடித்தால் என்ன ? நாம் முருகனை கும்பிடுவோம் என்று பக்த்தர்கள் எவரும் கண்டும் காணாதது போல இருந்துவிட்டார்கள். அதர்மச் செயல் புரியும் அசுரர்களை வதைத்த முருகப்பெருமான். ஆனால் அங்கே கூடி நின்ற முருக பக்த்தர்கள் எவரும், நடக்கும் அதர்மத்தை தட்டிக்கேட்க்கவே இல்லை. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு இருந்தார்கள்.
ஆனால் காரில் வந்து இறங்கிய ரவுடிகளோ சிலபேர் தான். அங்கே நின்றிருந்த பக்த்தர்கள் ரவுடிகளை அடிக்கவேண்டியது இல்லை. மாறாக பொலிசிலாவது பிடித்துக்கொடுத்திருக்கலாம். வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை காவடி எடுப்பவர் தாக்கப்பட்டதை கண்ட வெள்ளை இனத்தவர்(ஆங்கிலேயர்) ஒருவரே பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பையும் மேற்கொண்டுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாருக்கு அந்த ஆங்கிலேயர் தான் சாட்சியும் சொல்லியுள்ளார். ஆனால் அங்கே நின்ற தமிழ் பக்த்தர்கள் பேசாமல் பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்கள் என்றும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் ஒருவிடையம் உள்ளது. இக் கோயில் நிர்வாகத்திடம் பொலிசார் ஏற்கனவே தாம் பாதுகாப்பு வழங்குகிறோம் ஆனால் 1500 பவுன்ஸ் தரவேண்டும் என்று கோரியுள்ளார்கள். ஆனால் 1500 பவுன்ஸை ஏன் கொடுக்கவேண்டும் ? நாமே பாதுகாப்பு வழங்குவோம் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளதாம். ஆனால் பாதுகாப்பு வழங்கவும் அவர்கள் தவறியுள்ளார்கள் என்று விடையம் அறிந்த வட்டாரம் அதிர்வு இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/953.html

Geen opmerkingen:

Een reactie posten