தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

புதிய ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன்னும் இலங்கை பேரினவாதிகளின் பார்வையும் !



புதிய ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் இன்று பேரவையில் உரையாற்றிய பிறகு, அவரை ஒரு முஸ்லிம் என்று சொல்லி, அவரையும் கரித்து கொட்ட (தமிழ் பூர்வீகம் கொண்ட நவி பிள்ளையை தமிழர் சார்பானவர் என்று சொன்னது போல்) இங்கு ஒரு கூட்டம் கிளம்பலாம் என்ற சிறிய கேள்வி இருக்கின்றது.
இது தொடர்பாக கடந்த காலங்களில் நவி அம்மையாருக்கு இருந்த சவால் மற்றும் புதிய ஆணையாளருக்கு வரவிருக்கும் சவால் பற்றி பார்ப்போமானால்
இலங்கை விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை குழுவின் ஏற்­பாட்­டாளர் சன்ட்ரா பெய்டா அல்­லது புதிய மனித உரிமை ஆணையாளர் இந்த வாய்­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ளார்.
இந்த தருணத்தில் முன்னால் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் ஒரு தமிழர் என்றும் ஒரு பக்கசார்பற்ற விசாரணை நடத்துவதாகவும் பல தரப்பட்ட விமர்சனகள் எழுந்தன.
இதற்கு அரசாங்கம் மற்றும் அரசாங்க அமைச்சர்கள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு பல எதிர்ப்பும் தெரிவித்திருந்தமை நாம் அறிந்த உண்மை.
ஆனால் எது எவ்வாறாயினும் இது வரைக்கும் இந்தியா முதல் பல சர்வதேச நாடுகளும் இலங்கையை வைத்து அரசியல் நடத்துவதே உண்மையான விடயமாக உள்ளது.
இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்று இருக்கும் புதிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வரவிருக்கும் சவால்களை சற்று பார்ப்போமானால்,
இவர் ஒரு முஸ்லிம் என்றதனால் இவருக்கு வரப்போகும் சவால்கள் மிக உன்னிப்பாக பார்க்க வேண்டும். தமிழராகிய நவி அம்மையாருக்கு ஏற்ப்பட்ட சவால்களை விட மிகவும் பாரிய சவாலை இவர் எதிர் நோக்குவார் என்பது மறுக்கப்படாத உண்மையாகவே இருக்கும்.
இவருடைய நடவடிக்கை இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை ஏற்ப்படுதுமா இல்லை, இவரும் இன்னும் ஒரு தசாப்தம் இந்த தமிழரின் பிரசினையை எடுத்து செல்வாரா என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெரும் நடவடிக்கைகள் எல்லாம் வைத்து பார்க்கும் போது, இலங்கை அரசாங்கத்தினால் இவரை தீவிரவாதி என சித்தரிக்கும் கும்பல் ஒன்றை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாதிகளினால் கட்டவிழ்த்து விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றமையை கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களின் மூலம் புலன்படுகின்றது.
இதனாலேயோ தெரியவில்லை அண்மைக் காலங்களாக இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் ஒரு சில முஸ்லிம் நாடுகளை ஆதரிப்பதாக இருக்கின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் எதோ ஒரு வழியில் நடக்கவிருக்கும் முன் நகர்வுகளை முஸ்லிம் நாடுகளை வைத்து தகர்க்கலாம் என்ற சிறு உன்னிப்பு காணப்படுகின்றமையும் தெளிவான ஒரு விடயமாக உள்ளது.
அரசாங்கத்தின் அறிவிப்பு மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்பு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அரசங்கம் தெரிவித்திருக்கும் நிலையில் சர்வதேச விசாரணைக்கு மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்ற செய்தி அரசாங்கத்தின் அச்சத் தன்மையயும் காட்டுகின்றது.
இதுவே தமிழர்கள் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டிய தருணம் ஈழத் தலைவர்கள் சுயமான முடிவினை எடுக்க வேண்டிய தருணம் இதுவே.
இலங்கைக்குள் தீர்வினை ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் தலைமைகள் இனி மேலும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் அமைகின்றது என்பதே உண்மை நிலையாக உள்ளது.
இந்த சர்வதேச விசாரணை என்ற போர்வைக்குள் அகப்படிருக்கும் அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் தருணம் அமைந்துள்ளது. இதை சரியான முறயில் பயன்படுத்துவதே தமிழ் தலைமையின் கையில்தான் இருக்கின்றது.
இவற்றுக்கும் இந்தியாவின் உதவியை நாட முயற்சிக்கும் ஆனால் இதை போன்று முட்டாள் தனம் வேறு ஒன்றுமாய் இருக்காது.
இந்தியாவுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி நடந்தது என்ன?  முடிவில்லா பயணமாகவே அமைகின்றது
ஏனெனில், சர்வதேச விசாரணைகள் இலங்கையின் அடக்குமுறை அரசிற்கும், விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கும் எதிரானதேயின்றி சாதாரண சிங்கள மக்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ எதிரானதல்ல.
சர்வதேச விசாரணை சரியாக நடந்தால் கூட தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளுக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரும் என்று யாரும் கூறவில்லை.
வழக்கு விசாரணை தீர்ப்புகள் அரசியல் தீர்வை பெற்றுத்தரா. ஆனால், விசாரணை தீர்ப்புகள், முடிவுகள் இலங்கை அரசிற்கு எதிரானதாக இருக்கும்போது, குறிப்பாக தமிழின அழிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும்போது, அரசியல் தீர்விற்கான சர்வதேச அழுத்தம் குவிக்கப்பட்ட நிலைமையில் பிரயோகிக்கப்படலாம்.
சர்வதேச விசாரணைகள் நடைபெறாது அல்லது தமிழ் மக்கள் அவற்றை நிராகரிப்பதாக உத்தரவாதம் கொடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு லஞ்சம் கொடுத்தாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தையாவது முறையாக முழுமையாக அமுல்படுத்தும் என்று நம்பக்கூடியதாக இல்லை.
வடமாகாண சபையின் நியதிச் சட்டமாக்கும் அதிகாரம், நிதிகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரங்கள் கூட மறுக்கப்படுகின்றன. காணிகள் உரித்து மாற்றம் செய்யும் உறுதிகளுக்கான முத்திரை வரிகளை கூட வடமாகாணசபை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பல அதிகாரங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
இவற்றை அடிப்படையாகக் கொண்டே வடமாகாணசபை மத்திய அரசினால் முடக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதல் யாழ்ப்பாண, மன்னார் கத்தோலிக்க ஆயர்கள் வரை அனைவரும் எடுத்துக்கூறி வருகின்றனர்.
இதனால் சர்வதேச விசாரணைகள் தான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர தடையாக இருப்பதாக கூறுவது, உண்மைக்குப் புறம்பானது.
அத்துடன், அடக்குகின்ற அரசாங்கத்திற்கே அரசியல்தீர்வை வழங்கும் பாரிய பொறுப்புண்டு என்பது புரியப்பட வேண்டியதாகும்.  சர்வதேச விசாரணைகள் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்று கூறி ஏகாதிபத்திய தாசர்களை பாதுகாக்க வேண்டியதில்லை.
எனவே, தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு புதிதாக வந்த மனித உரிமை ஆணையாளர் மதிபளிப்பதுடன் 3 தசாப்த கால அடக்கு முறைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பதே உண்மை நிலையாக இருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUix4.html

Geen opmerkingen:

Een reactie posten