தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

சர்வதேசத்துடன் கைகோர்ப்பது கூட்டமைப்பிற்கு அழிவையே தரும்: அமைச்சர் சம்பிக்க!



வடக்கு முதல்வருக்கு ஆளுனரால் வாகனம் கையளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 07:20.18 AM GMT ]
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கா​ன வாகனங்கள் இன்றைய தினம் கையளிக்கப்ப​ட்டுள்ளன​.
குறித்த வாகனங்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, முதலமைச்சரி​ன் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆகியோரிடம் கையளித்துள்ளா​ர்.
முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வாகனமும் சுகாதார அமைச்சருக்கு 7 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வாகனமும் கையளிக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்கு என வரவு செலவுத் திட்டத்தில் தலா 58 இலட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  
மேலும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர்கள் வருகை தராத காரணத்தினால் அவர்களுக்கான செயலாளர்களிடம் வாகனங்கள் கையளிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht1.html

வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலிகள் வீரவணக்க நாள்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 07:25.27 AM GMT ]
வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று விடுதலைப் புலிகளினால் மும்முனை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இந்த பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.
இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht2.html
சர்வதேசத்துடன் கைகோர்ப்பது கூட்டமைப்பிற்கு அழிவையே தரும்: அமைச்சர் சம்பிக்க
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 07:36.18 AM GMT ]
தற்போதைய அரசை பலவீனப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்த்து செல்வதால் இறுதியில் கூட்டமைப்பு அழிவையே சந்திக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்வராவிட்டால் அஹிம்சை வழியில் போராட்டம் நடத்த தயார் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் மாநாட்டின் போது உரையாற்றியிருந்தார்.
இது தொடர்பில் கருத்துக் கூறும்போதே தொழில்நுட்பவியல் மற்றும் அணுசக்தி விவகார அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கை இணைத்து தனித் தமிழீழத்தை உருவாக்க இந்தியா துணைபோனாலும் இவர்களையும் தடுத்து நாங்கள் போராடத் தயாராகவும் இருக்கின்றோம். கூட்டமைப்பின் அஹிம்சை வழி போராட்டம் ஆயுத போராட்டமாகவும் மாறலாம்.
விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை புலிகளின் ஆதரவு கட்சிகளாகவே செயல்பட்டிருக்கும்.
தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை அவர்கள் கவனத்தில் கொள்ளாது புலிகளின் செயல்களை நியாயப்படுத்துவதையே தற்போது செய்து வருகின்றது.
தமிழர் பிரச்சினைகளை இலங்கை அரசுடன் பேசி தீர்க்க வேண்டும் அதை புரிந்து கொள்ளாது. சர்வதேசத்துடன் கைகோர்த்து இந்த அரசை பலவீனப்படுத்த நினைத்தால் அது தமிழ்த் தேசிய கூட்டமைபிற்கு அழிவையே தேடி தரும்.
இவர்கள் கூறுவது அஹிம்சை போராட்டம் அல்ல ஆயுத போராட்ட கொள்கையை மனதில் வைத்து பேசுகின்றார்கள் என்று அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUht3.html

Geen opmerkingen:

Een reactie posten