தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சக்விதி ரணசிங்க பிணையில் விடுதலை
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 10:39.43 AM GMT ]
ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்விதி ரணசிங்க உட்பட 11 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொட நீதவான் நீதிமன்றம் இவர்களை பிணையில் விடுதலை செய்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுகளை விடுவிக்கவும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையையும் இரத்துச் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நுகேகொட பிரதேசத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeo2.html
கமரூன் மற்றும் ஹாப்பர் ஆகியோரை நேருக்கு நேர் சந்திக்கும் மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 11:28.31 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை நேருக்கு நேர் சந்திக்க உள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சந்திக்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கனேடிய பிரதமர் ஹாப்பர் மற்றும் பிரித்தானிய பிரதமர் கமரூன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உரிமை பிரச்சினைகளை காரணம் காட்டி கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய ஆதரவு வழங்கும் என அறிவித்திருந்தார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இரண்டு கூட்டங்கள் அந்த அமைப்பின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுநலவாய அமைப்பின் மறுசீரமைப்பு மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
அதேவேளை அதே தினத்தில் பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் 13வது கூட்டமும் நடைபெறவுள்ளது, அதில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கலந்து கொள்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeo3.html
வவுனியாவில் தீ விபத்து: 10 ஏக்கர் காடு அழிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 11:58.43 AM GMT ]
வவுனியா, இரட்டை பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 10 ஏக்கர் காடு அழிந்துள்ளது.
இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுக்கு எவராவது தீ வைத்தனரா அல்லது எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeo4.html
மூன்றாம் முறை போட்டிக்காக ஜனாதிபதி உயர்நீதிமன்றம் செல்லமாட்டார்!- மொஹான் சமரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 12:12.45 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவார் என்று ஊகம் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான சமரநாயக்க இந்த செய்தியை மறுத்துள்ளார்.
முன்னதாக மூன்றாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த ராஜபக்ச உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை எதிர்ப்பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்;டில் கொண்டு வரப்பட்ட 18வது அரசியல் அமைப்பில் ஜனாதிபதி ஒருவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற வசதி செய்யப்பட்டுள்ள போதும் அதில் சில சட்டசிக்கல்கள் உள்ளன.
எனவே மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிடமுடியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில்; அவ்வாறு போட்டியிடுவதற்கு 18வது அரசியல் அமைப்பு வழியேற்படுத்தவில்லை என்று கூறி தாம் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் மூன்றாவது முறை தாம் போட்டியிடுவதற்கான பச்சைவிளக்கு சமிஞ்சையை மஹிந்த ராஜபக்சää நாட்டின் சட்டத்துறை உயர்நிலை அதிகாரியை சந்தித்து பெற்றிருக்கிறார்.
எனவே அவர் தேர்தலில் மூன்றாம் முறையாகவும் போட்டியிட தயாராகிவிட்டார் என்று பிந்திய செய்தி வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் உயர்நீதிமன்ற ஆலோசனையை பெற முயற்சிக்கமாட்டார் என்று மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUeo7.html
மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 12:27.17 PM GMT ]
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்திலுள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகை அருகே நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா.விசாரணைக் குழு இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தமிழக அரசே முன்மொழிந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களிடம் ஐ.நா. விசாரணைக் குழு நேரிடையாக விசாரணை நடத்த மத்திய அரசு விசா வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUepy.html

Geen opmerkingen:

Een reactie posten