18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான சட்ட விளக்கத்தை வழங்க மறுத்தமையே இலங்கையின் 43வது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட அடிப்படை காரணமாக அமைந்ததாக தெரியவந்துள்ளது.
ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இதனை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரிடம் கூறியுள்ளதாக ஜே.வி.பியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் மாத்திரமே அறிந்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திவிநெகும சட்ட மூலம் காரணமாகவே அவர் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அதுவல்ல எனவும் மேற்கூறிய விடயமே அவரது பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் விஜித ஹேரத், அமைச்சர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஷிராணி, பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjuy.html
Geen opmerkingen:
Een reactie posten