பிள்ளைகளுக்கு உச்சளவில் கல்வியை வழங்க பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை பிரயோசனப்படுத்தி பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை மாத்திரமல்லாது நாட்டின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற பிள்ளைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகாணத்தின் சில பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை மாணவர்களுக்கு கையளிக்கும் வைபவங்களில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
பதுளை கல்வி வலயத்தின் பதுளை சரஸ்வதி தமிழ் கல்லூரி, உடுவெல மத்திய மகா வித்தியாலயம், கெந்தேகொல்ல நவோத்ய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை ஜனாதிபதி இன்று திறந்து வைத்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfqy.html
Geen opmerkingen:
Een reactie posten