[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 12:54.37 PM GMT ]
இத்தாவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.செல்வராஜா (வயது 63) என்பவரே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கி வலது காலை இழந்துள்ளார்.
கிளிநொச்சி, பளை பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்கு குறித்த நபர் இன்று வேட்டைக்குச் சென்றுள்ளார். இதன்போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களால் குறித்த நபர் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது வேட்பாளர் தேவையில்லை! கட்சியின் தலைவரே வேட்பாளர்: சஜித் பிரேமதாச
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 01:38.22 PM GMT ]
போருக்கு எதிரான செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் எதுவும் அந்த தேர்தல் பிரசாரத்தில் இணைத்து கொள்ளப்பட போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பசறையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது சஜித் பிரேமதாச இதனை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது வேட்பாளர்கள் எமது தேவையில்லை. எமது தலைவரை நாங்கள் வேட்பாளராக நிறுத்த போகிறோம்.
எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட எவரும் எம்முடன் இணைய முடியும். ஆனால், நிபந்தனைகளை விதிக்க முடியாது. தேவையற்ற பொது சின்னங்கள் தேவையில்லை.
கட்சியின் தலைவர் யானைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும். அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்களை இணைத்து கொண்டு முன்னணியை ஏற்படுத்த தேவையில்லை.
சிங்கள பௌத்த வாக்குகளின் ஒரு பகுதியை பிரித்தெடுத்தால் போதுமானது. தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்.
அப்படியிருக்கும் போது முன்னணிகள் எதற்கு?. அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை கட்சியில் இருந்து துரத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhq0.html
Geen opmerkingen:
Een reactie posten