தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

சுப்பிரமணிய சுவாமி படத்தை எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

தற்கொலை செய்யும் நாடுகளில் இலங்கைக்கு 4வது இடம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 03:52.17 PM GMT ] [ பி.பி.சி ]
அதிக தற்கொலை நடக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன.
தற்கொலை தவிர்ப்பு சம்பந்தமாக உலக சுகாதார கழகம் முதல் தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்று விவரம் வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் முக்கால் வாசியளவு வறுமை அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருகிறது.
குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் தற்கொலைகள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நடக்கின்றன.
உலகில் நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு, வடகொரியா, இந்தியா இந்தோனேஷியா நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்துவிடுவதாக இந்த அறிக்கை காட்டுகிறது.
விகிதாசார ரீதியில் அதிக தற்கொலை நடக்கும் நாடுகள் என்று பார்க்கையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 28.5 தற்கொலைகள் என்ற விகிதத்தில் இலங்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. இதில் 11 இடத்தில் உள்ள இந்தியாவில் இந்த விகிதம் 21.1ஆக உள்ளது.
15 முதல் 29 வயது வரையிலானோரின் மரணங்களைப் பொறுத்தவரையில் முதல் பெரிய காரணி என்றால் அது தற்கொலைதான் என்றும், அதேநேரம் உலகில் பல இடங்களில் அதிகம் தற்கொலை செய்துகொள்வோர் என்றால் அது 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் பார்க்க தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஓய்வு பெற்ற படை வீரர் தூக்கிட்டு தற்கொலை
ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வரகாபொல தொலன்கமுவ விஹாரைக்கு அருகாமையில், ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்ப பிணக்கு காரணமாக குறித்த விமானப்படை வீரர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
50 வயதான தொலன்கமுவ என்னும் இடத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjr1.html
ஊவா மாகாணசபைத் தேர்தல்: ஆளும் தரப்புக்கு முதல் தோல்வி - ஜே.வி.பிக்கு வெற்றி - வன்முறை தொடர்பில் 10பேர் கைது
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 03:35.12 PM GMT ]
ஊவா மாகாணசபை தேர்தலுக்காக பணியாளர்களை விடுவிக்க வேண்டாம் என்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை, விடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மகாநாமஹேவ இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று இடம்பெற்ற விசாரணையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களில் இருந்து ஊவா மாகாணசபை தேர்தலுக்காக பணியாளர்களையோ நிதிகளையோ மற்றும் ஏனைய சொத்துக்களையோ விடுவிக்க வேண்டாம் என்று குறித்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கும் தலைவர்களுக்கு எழுத்து மூலம் கேட்டுக்கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில் மனித உரிமை ஆணைக்குழுவின் முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 16 ஆயிரம் அரச பணியாளர்கள் கள ஆய்வு என்ற அடிப்படையில், அரசாங்கத்துக்கு ஆதவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருந்தமை தடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
இதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோருக்கு நன்றி கூறுவதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ஊவா மாகாணசபை தேர்தல் பிரசாரங்களில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் கேட்டுள்ளதாக குறிப்பிட்டார். எனினும் குறித்த அமைச்சு, தாம் யாரையும் உத்தியோகபூர்வமாக ஊவா மாகாணசபை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளருக்கு பதிலளித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் 10பேர் கைது
ஊவா மாகாணத்தில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 10பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் தொடர்பான கண்காணிப்பு பொலிஸ் பிரிவு இதனை இன்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில் ஊவா மாகாணசபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 42 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனினும் தேர்தல் தொடர்பான கண்காணிப்பங்களின் தகவல்படி இதுவரை வன்முறைகள் தொடர்பில் நூறுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதற்கிடையில் ஊவா மாகாணசபைக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றும் நாளையும் நடைபெறுகி;ன்றன.
இன்று இடம்பெற்ற வாக்களிப்புகள் அமைதியாக இடம்பெற்றதாக தேர்தல் தொடர்பான சுயாதீன கண்காணிப்பகங்கள் அறிவித்துள்ளன.
ஊவா மாகாணசபை தேர்தல் எதிர்வரும் 20 ம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjr0.html

சுப்பிரமணிய சுவாமி படத்தை எரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 03:30.56 PM GMT ]
பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீனவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தமையை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி வீட்டு முன்பு வியாழக்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரபிரசாத் தலைமையில் சென்றனர்.
அவர்களை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவரது படத்தை தீ வைத்து கொளுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது,
கடலில் மீன்பிடிக்கச் சென்று, இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுதலை செய்துவிட்டு, படகுகளை பறிமுதல் செய்யலாம் என்று இலங்கை அதிபதிர் ராஜபச்சவிடம் தான் தெரிவித்தாக சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார்.
இவரது பேச்சு மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை மைலாப்பூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjrz.html

Geen opmerkingen:

Een reactie posten