தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

புதிய ஆணையாளரைச் சந்திக்க இலங்கை தீவிர முயற்சி!

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் மீளவும் இடம்பெயரும் அவலம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 02:12.14 AM GMT ]
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே அல்லற்படும் நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள சிறிய மழைக்கே ஈடுகொடுக்க முடியாமல் அவஸ்தையை எதிர்நோக்கி வருகின்றனர்.
மழை தொடருமித்து இடம்பெயர்வு தவிர்க்க முடியாததாகி விடும் என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்த மக்களுக்கான அவசர உதவிகள் தேவைப்படுகின்றன. உதவுவதற்கு அரச அதிகாரிகளும், அரசியல் தலமைகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
வலி.வடக்கில் 25 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத 34 முகாம்களில் வாழ்கின்றனர். ஆயுதப் போர் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்துவிட்ட போதும் அவர்களுடைய சொந்த நிலங்கள், வீடுகள் மீள ஒப்படைக்கப்படவில்லை.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் ஒருவேளை உணவிற்குக் கூடப் போராடும் நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் சஜீவன் தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அப்போது ஒதுக்கப்பட்ட அதே இடங்களில் சிறிய குடிசைகளில் வாழ்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகியபோதும் இருப்பிடங்கள், அதே சிறிய குடிசையாகவே உள்ளன. நெருக்கடி காரணமாக ஆண்கள் பெரும்பாலும் குடிசைகளுக்கு வெளியில் படுத்துறங்கும் நிலையே காணப்படுகின்றது.
தற்போது ஆரம்பித்துள்ள சிறிய மழைக்குக் கூட ஈடுகொடுக்கும் நிலையில் இந்த மக்களின் குடிசைகள் இல்லை. மழை தொடருமாயின் மோசமாக அவலநிலையை இவர்கள் எதிர்நோக்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.
நாளாந்த கூலித் வேலைகளையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்த மக்களுக்கு மழை ஆரம்பித்தால் அந்த வேலைகள் கூட இல்லாதுபோகும்.
எனவே, அவலம் வருமுன் திட்டமிட்டு அதிலிருந்து இந்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடனடியாக மேற்கொள்ள முன்வரவேண்டும் எனவும் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhs0.html

சுவிஸில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ஈகைப் பேரொளி செந்தில்குமரனின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 02:21.22 AM GMT ]
தன்னினத்தின் துயர்துடைக்க தன்னுடலைத் தீயில் கருக்கி உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த ஈகைப் பேரொளி செந்தில்குமரனின் முதலாம் ஆண்டு நினைவாக, அனைத்து ஈகைப் பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது சுவிஸ் வலே மாநிலத்தில் சியோன் நகரில் நேற்று முன்தினம் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்  மிகவும் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் உறுதிமொழியுடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளையில், தமிழர் கலை பண்பாட்டுக்கழக இசைக் கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு வெளியீடாக ஈகைப் பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாகவும், தமிழ் இன விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களுக்கு சமர்ப்பணமாகவும் “விடுதலை நெருப்பு” எனும் இறுவட்டுடன் ஈகைப் பேரொளி செந்தில்குமரன், தோழர் செங்கொடி மற்றும் தமிழ் இன அழிப்பை வெளிப்படுத்தும் வகையிலான தபாற்தலைகளும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தீயினிற் கருவாகிய ஈகியர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் இன உணர்வுமிக்க எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சோடு கவிதாஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் வணக்க நிகழ்வு உணர்வுடன் நிறைவு பெற்றன.
அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும் என்று தீயில் கருவாகுமுன் செந்தில்குமரன் எம்முன் விட்டுச் சென்ற பணியை வலுப்படுத்திச் செயற்படுத்த 15.09.2014 அன்று ஐ.நா சபை முன்றல் முருகதாசன் திடலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்க முரசறைவோம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhs1.html
கிரிக்கெட் வீரரான திஸர நியூஸிலாந்து செல்வதைத் தடுத்த ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 02:50.49 AM GMT ]
இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அனைத்துத்துறை ஆட்டக்காரர் திஸர பெரேராவுக்கு நியூஸிலாந்து தேசிய அணியில் சேர்ந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை பெரேரா தற்போது நிராகரித்துள்ளார்.
இலங்கை அணியில் இருந்து திறனின்மை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அவருக்கு பிரஜாவுரிமை தருவதற்கும் தேசிய அணியில் இடம்தருவதற்கும் நியூஸிலாந்து அழைப்பு விடுத்தது. இதனை முன்னதாக பெரேரா ஏற்றுக்கொண்டார்.
எனினும் தாய் நாட்டை விட்டு செல்ல விருப்பமின்மையால் அதனை நிராகரித்து விட்டதாக திஸர பெரேரா கூறியுள்ளார்.
இந்தவிடயத்தில் தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhs3.html
ஐ.தே.கவிலிருந்து வேறு கட்சிக்குத் தாவும் நடவடிக்கைக்கு முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 03:03.40 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஏனைய கட்சிகளில் இணைவோர் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதித் தலைவராக்குவதற்கும், கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைந்துக் கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை அடுத்தே இந்த விடயம் முடிவுக்கு வந்துள்ளதாக அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த முடிவை எச்சரிக்கையுடன் பார்ப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஷிரால் லக்திலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhs4.html
ஜனாதிபதிக்கு எதிரான வழக்கில் நானே வாதாடுவேன்: சரத் என் சில்வா அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 03:11.16 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார்.
நாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்துப்படி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார்.
18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அதில் சில சிக்கல்கள் இருப்பதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோருவதற்கு ஜனாதிபதிக்கு முடியாது என்றும் சரத் என் சில்வா தெரிவி;த்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhs5.html

புதிய ஆணையாளரைச் சந்திக்க இலங்கை தீவிர முயற்சி
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 03:18.48 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைனை சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 27வது அமர்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த சந்திப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ். ஆணையாளர் ஹுசைனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆணையாளருடன் உறவை மேம்படுத்திக் கொள்ள அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பதவியில் இருந்த ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இலங்கை அரசாங்கம் விரிசல் மிக்க உறவையே கொண்டிருந்தது.
இந்தநிலையில் புதிய ஆணையாளருடன் புரிந்துணர்வான உறவை கொண்டிருக்க விரும்புவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்  ஹுசைன் தமது கன்னி உரையில் இலங்கை ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhs6.html

Geen opmerkingen:

Een reactie posten