[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 09:15.29 AM GMT ]
பொதுமக்கள்,சிறுவர்கள்,உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
பள்ளிவாயிகளில் நடைபெற்ற தொழுகையினை தொடர்ந்து பிரதான வீதியில் ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தினை நோக்கிச்சென்றனர்.
சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுங்கள்
சட்டத்துறையே எதிரிக்கு துணைபோகாதே
சிறுவர் துஸ்பிரயோகத்தினை நிறுத்து
சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு அதிகாரிகளே எங்கள் விடயத்திலும் கவனம் செலுத்துங்கள்
போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்ட பேரணி காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு சென்றதுடன் அங்கு நிர்வாக உத்தியோகத்தர் சுந்தராஜனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfo3.html
19 வருடங்கள் வீசா இன்றி தங்கியிருந்த இந்தியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 09:28.22 AM GMT ]
இந்த சந்தேக நபர் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய, விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு, அனுராதபுரம் மேலதிக மாவட்ட நீதிபதியும் பிரதான நீதவானுமான யூரேஷா டி சில்வா பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர் 1995 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இலங்கை வந்து, சில பிரதேசங்களில் வசித்து வந்ததுடன் அவ்வப்போது சில வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfo4.html
அளுத்கம மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 09:34.45 AM GMT ]
தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைகளில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி பிரயோகம் காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்தது.
இதனடிப்படையில், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அளுத்கம இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை கொழும்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சப்ராஸ் ஹம்சா, இரண்டு மரணங்களுக்கு துப்பாக்கி பிரயோகம் காரணமாக ஏற்பட்டது என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கியின் தோட்டா தலை பகுதிக்குள் சென்றதால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது என்றார்.
எவ்வாறாயினும் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfo5.html
Geen opmerkingen:
Een reactie posten