தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம்: டலஸ் அழகப்பெரும!



ஐ.நாவின் புதிய ஆணையாளருடன் பேசத் தயார்! இலங்கைக்கு வருமாறு மகிந்த அழைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 03:58.20 PM GMT ]
ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பொறிமுறைகளுடன், குறிப்பாக மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உள்ளதையும் புதிய மனித உரிமை ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அது தயாராகயுள்ளதையும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவரிற்கு அழைப்பு விடுத்துள்ளதையும் ஜப்பானிய பிரதமர் பாராட்டினார்.
பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவை இந்த மாதம் இலங்கை அதிகாரிகள் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளதையும் பொருத்தமான தருணத்தில் இலங்கைக்கு அழைக்கவுள்ளதையும் அவர் வரவேற்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபகச தனது அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனும் ஐ.நாவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதை வலியுறுத்தினார்.
நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டிய ஜப்பான் தலைவர் சம்பந்தப்பட்ட சகலதரப்பினர் மத்தியிலும் பேச்சுக்கள் இடம்பெற வேண்டியது நல்லிணக்கத்திற்கு அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.
வடபகுதியில் தேர்தல்களை நடத்தியமை, சாட்சியங்களை பாதுகாப்பதற்கான சட்டமூலம், காணமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஆணை விஸ்தரிக்கப்பட்டது போன்றவற்றையும் ஜப்பானிய பிரதமர் வரவேற்றார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறும் ஜப்பானின் முயற்சிக்கான இலங்கையின் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiv7.html
விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது!
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 11:45.16 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை நேசிக்கும் தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது.
போலியான வாதங்களை முன்வைக்காது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் அங்கம் வகிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமை ஒரு புறத்தில் ஜனநாயக கொள்கைளையும் மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளையும் வெளிப்படுத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு மீண்டுமொருமுறை கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுகின்றேன் என நிமால் சிறிபால டி சில்வா கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகவும் அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiwz.html
இலங்கைக்கு எதிராக மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம்: டலஸ் அழகப்பெரும
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 12:26.43 AM GMT ]
சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் (இன்று) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனித உரிமையானது சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக மாறியிருப்பதைத் தடுப்பதற்காக புதிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கும் ஒரு அமைப்பாக மாறிவிட்டது.
இவ்வாறானதொரு அமைப்பில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் அரசாங்கம் இணங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன. அந்த நாடுகளுக்கு எமது பிழையற்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம்.
நவநீதம்பிள்ளையோ அல்லது புதிய ஆணையாளரோ இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பின்னர் அதற்கான பதிலை நாம் வழங்குவோம். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றை கொண்டுவரும் அளவுக்கு எந்தவிதமான பிழையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு சரியானதொரு வரை விலக்கணத்தை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும்.
மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக செயற்படுகின்ற மத அமைப்புகள் சிலவற்றை மாத்திரமே பயங்கரவாத அமைப்பு என்றும் ஏனையவற்றை விடுதலை இயக்கம் என்றும் சித்தரிக்கின்றனர்.
பயங்கரவாதம் என்பதற்கு சரியானதொரு வரைவிலக்கணம் உருவாக்கப்பட வேண்டும். இதனையே நாம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தொடர்ந்தும் கோரி வருகின்றோம் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw0.html

Geen opmerkingen:

Een reactie posten