பயங்கரவாதமாம் பதறுகிறார் ஹக்கீம்
கிண்ணியாவில் இன்று (03) நடைபெற்ற வைத்திய நிபுணர்களுக்கான விடுதிக் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் தமிழில் தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சிகளையே ஏற்பாடு செய்வேன்.
இன்று கிண்ணியாவில் அதை துணிவோடு செய்தார்கள். நான் அதற்காக இங்குள்ள ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுகின்றேன்.
ஓர் உத்தியோக பூர்வ நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும்தான் பாட வேண்டும் என்று ஒரு தேவையில்லாத வலுக் கட்டாயம் திணிக்கப்படுகின்றது.
ஓர் உத்தியோக பூர்வ நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும்தான் பாட வேண்டும் என்று ஒரு தேவையில்லாத வலுக் கட்டாயம் திணிக்கப்படுகின்றது.
இந்தத் திணிப்புக் கெதிராக பேசுவதற்கும் அதற்கு கெதிராக துணிவோடு நடப்பதற்கும் எங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் இந்த ஆட்சியில் பங்காளியாக இருப்பதில் அர்த்தமில்லை.
எந்த மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொண்டுவரப்பட்ட பின் அந்த இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு இருக்கின்றது.
ஆணைக்குழுவை அமைத்து அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சர்வதேசத்துக்கு பறை சாற்றுவதில் எந்த அர்த்தமுமில்லை.
எனவேதான் இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருந்து கொண்டும் அரசாங்கத்தில் அங்கமாக இருந்து கொண்டும் இந்த விடயத்தில் கொஞ்சம் பிடி வாதப் போக்கை நான் கடைப்பிடிக்கிறேன்.
எனவேதான் இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருந்து கொண்டும் அரசாங்கத்தில் அங்கமாக இருந்து கொண்டும் இந்த விடயத்தில் கொஞ்சம் பிடி வாதப் போக்கை நான் கடைப்பிடிக்கிறேன்.
அரசியல் அமைப்பில் இருக்கின்ற விடயத்தை அனுபவிப்பதற்கு எங்களுக்கும் உரிமை இருக்கின்றது. அரசியல் அமைப்பில் இருக்கின்ற ஆயிரம் விடயங்களை இருப்பதே தெரியாமல் கிடப்பில் போடுகின்றார்கள்.
எங்கெல்லம் போகப் பயப்பட்டார்களோ அந்த இடங்கள் எல்லாம் இன்று தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இந்த நாட்டிலே தொல்பொருட்கள் எல்லாம் பாதுகாக்கப்படவேண்டும். தாராளமாக பாதுகாருங்கள். ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எல்லா விடயங்களிலும் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று நில அளவையாளர்களுக்கு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு காணி ஒதுக்கின்ற வேலைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இவை சட்டம், நீதி, நியாய ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
ஆனால், இவை சட்டம், நீதி, நியாய ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
யுத்த காலத்தில் இல்லாத வனப் பரிபாலனங்கள் அதிகாரிகளுடைய அட்டகாசம் இப்பொழுது தலைவிரித்து ஆடுகின்ற கோலத்தில் எல்லோரும் இருக்கின்றார்கள்.
அன்றாட ஜீவனனோபாயம். அதிலே படுகின்ற கஷ்டம் என்பன அரசாங்கத்தின் வருமானத்தை கருதி இன்று வருமானத்துக்;கு வாழ்வதாரமே பாதிக்கின்ற அளவுக்கு நடக்கின்றது.
இப்போது இடங்களிலே சட்டம் அமுலாக்கபடுவதில்லை. அசமந்தப் போக்கும் தாமதமுமே காணப்படுகின்றது. மக்களின் வாழ்வதார விடயத்தில் கடுமையான போக்கு மிகப் பெரிய நெருக்கடி இன்று காணப்படுகின்றது.
நிர்வாக ரீதியாக ஒரு விதப் பயங்கரவாதம் இன்று காணப்படுகின்றது. இந்த நாட்டிலே ஆயுதப்பயங்கரவாதம் தொடங்கியுள்ளது. இதற்கு அன்றாடம் மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர் என்றார்.
http://www.jvpnews.com/srilanka/81001.html
யார் இந்த சு.சாமி… BJP சாடல்
பா.ஜ.க. தலைவர் அமித்ஸா. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு பதிலளிக்கலாம். கட்சியில் பொறுப்பில் இல்லாத சுப்பிரமணியன் சுவாமி மீனவர்கள் குறித்துதெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்படும் மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்த தீர்வு காணப்படும்.
இவ்வாறே முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு கண்டது போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட காவிரி பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அறிவேன்.
இந்த நிலையில் எந்தவொரு பிரச்னையிலும் தீர்வு காண மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நல்ல தீர்வு கிடைக்கும். அதுபோல, காவிரி பிரச்னையிலும் தீர்வு காண மத்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என் பொன். ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/81017.html
இராணுவச் சிப்பாயின் தீக்குளிப்பு பின்னனி! பொதுபலசேனாவா
பன்னிப்பிட்டிய கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பியசேன என்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தீக்குளித்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தார்.
அதேவேளை தீக்குளிக்கும் எண்ணத்துடன் இந்த இராணுவ சிப்பாய் இருக்கவில்லை என்றும் வேறு நபர்களுடைய வற்புறுத்தலினால் தீக்குளித்திருக்கலாம் எனவும் உறவினர்கள் பொலிஸாரிடம் சந்தேகம் தெரிவித்ததாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
இராணுவச் சிப்பாயின் மரண விசாரணையின்போது உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டனர் என்றும் முழுமையான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீக்குளித்து காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பொதுபலசேன உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பௌத்த சமயத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கன்டி தலதாமாளிகை வளாகத்தில் கடந்த ஆண்டு புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தமைக்கும் பொதுபலசேன காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/81015.html
Geen opmerkingen:
Een reactie posten