இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜ்குமார் டினோசன் (வயது-10) என்ற சிறுவனே கழுத்துப் பகுதியில் காயமடைந்துள்ளான்.
இதனையடுத்து குறித்த சிறுவன், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவன், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் வீட்டின் பின் பகுதியில் குப்பைகளை எரியூட்டியபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfv4.html
Geen opmerkingen:
Een reactie posten