தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 mei 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவில் மன்னார் ஆயரின் சூழ்ச்சி அம்பலம்! வியப்பில் தமிழர்??


கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு கோரப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்


வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு இதுவரையில் அரசாங்கம் கோரவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்திடம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென அரசாங்கம் கோரினால் அது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவில் மன்னார் ஆயரின் சூழ்ச்சி அம்பலம்! வியப்பில் தமிழர்??


மன்னார் ஆயரின் தமிழ் கட்சிகளை ஒருங்கினைக்கும் முயற்சி உண்மையில் வரவேற்கத்தக்கதாகும் ஆனாலும் வட-கிழக்கின் ஏனைய ஆயர்களை இணைத்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவை ஸ்திரப்படுத்துவதில் மன்னார் ஆயர் முயற்சி எடுக்கவில்லையா? என்பது இன்னமும் வெளிவராத உண்மை . காரணம் மன்னார் ஆயர் அருட்தந்தை ஜெயபாலன் குருஸ் அவர்களால் வழிநடத்தப்பட்டு காலத்துக்கு உகந்த செயற்பாடுகளை செய்யும் இவரால் இச்சிந்தனை சிந்திக்கவில்லையா? என்பது பலரிடமும் உள்ள ஐயம்.
அத்துடன் யாழ்ப்பான ஆயர் வடமாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சகலரையும் சந்திக்கிறார் ஆனால் இவரின் பிரசன்னம் தவிக்கப்பட்டது எதற்காக? என புரியாத புதிராக உள்ளதுடன் கிழக்கு மாகாணம் சாந்து பெயர் செல்லும் அளவில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவில் இல்லை. குறிப்பாக திருகோணமலை மட்டக்களப்பிற்கு என இரு ஆயர்கள் உள்ளனர் அவர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை கண்துடைப்பிற்காக கிழக்கிலிருந்து வந்தவர்களால் மன்னார் ஆயரின் கருத்துக்களுக்கு தலையசைக்க முடியுமே தவிர சுயமாக கருத்துக் கூற முடியுமா
தமிழர் இனப்பிரச்சனையில் இதய சுத்தியுடன் செயற்படும் ஒரு மனிதராக இருந்தால் ஏன் இன் நிமிடம் வரைக்கும் வட-கிழக்கு ஆயர்களை இணைத்து ஒடுக்கப்பட்ட இனம் சாந்து இலங்கையளவிலம் உலகரங்கிலும் வியாபித்து செயற்பட முடியாமல் உள்ளது. நான்கு ஆர்கள் மத்தியிலுமே சரிவர புரிந்துனர்வு அற்ற நிலையே நீடிக்கின்றது, இதனால் ஒரு கருத்துக்காய் ஒரு மேசையில் அமர முடியாத நிலை 2009 மே 18க்கு பிட்பட்ட இன்நாள் வரைக்கும் நான்கு ஆயரும் இணைந்து தமிழ் சமூகம் சாந்து ஒரு அறிக்கை ஏனும் விட்டனரா இல்லை ஏன் திருச்சபையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதா?
உலக நாடுகள் பலவற்றின் விடுதலையில் பாதிரியார், ஆயர்களின் பிரசன்னம் மிக உயர்வானது இதற்கு தென் ஆபிரிக்கா சிறந்த உதாரணம் ஜ.நாவிற்கு சிவில் சமூகம் ஒப்பமிட்டு அனுப்பிய மடலில் ஏனைய மூன்று ஆயர்களினதும் ஒப்பம் இடப்பட்டிருக்குமானால் அதன் வலிமை இன்னும் பன் மடங்காயிருக்கும் இவ்வாறாக பலவற்றை அடிக்கிக் கெண்டே போகலாம்
இன்றைய நிலையில் மிகவும் அற்பணிப்புடனம் துடிப்புடனும் செயற்படும் மன்னார் ஆயர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு எவ்வளவு அவசியமோ அது போல் ஏனைய ஆயர்களினதும் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவது காலத்தின் கட்டாயம் இல்லையாயின் எல்லா இடங்களிலும் நடைபெறும் வரலாற்றுத் தவரை நீங்களும் செய்ததாக வரலாறு கூறுவதற்கு முன்னதாய் இதற்கு விடைகான்பது கட்டாயம் என்பதுடன் சில கட்சிகளின் பின்னால் நிற்பது போன்ற மாயையும் சந்தேகமும் கசலரிடமும் உள்ளது.
இவ்வாறான பலதரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் கடமை ஆயருக்கும் ஏனைய புத்திஜீவிகட்குள்ளும் உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவில் எவ்வாறு இணைத்தலைவர்களின் அவசியத்தை உணர்த்துகிறீர்களோ அதற்கு இணையக ஏனைய ஆயர்களை உள்வாங்க வேண்டும் இவ்வாறாக பல குறைகளுடனே நாம் குறைகட்கு தீர்வு தேடுவது மனதிற்கு கசப்பாயிருந்தாலும் தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அனாதரவாக விடக் கூடாது? அத்துடன் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு பக்கச்சார்பின்றி எல்லாப் புத்திஜீவிகளையும் இணைத்து ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவது தமிழ் சமூகத்திற்கு பல மடங்கு பலமாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு தலைமையில் இன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் எந்தவிதமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதிவு செய்வது தொடர்பிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்குத் தமிழரசுக் கட்சியினர் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாக, அந்தக் கட்சிக்கும் டெலோ அமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் குறித்து தெரிவித்த டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை என்ன வகையில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய நீண்ட கலந்துரையாடலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

meeting_tna_001meeting_tna_002meeting_tna_003meeting_tna_004meeting_tna_005meeting_tna_006

Geen opmerkingen:

Een reactie posten