[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:05.22 AM GMT ]
போருக்கு முன்னர் வடக்கில் தங்கியிருந்த சிங்கள மக்களுக்கு அவர்களது காணிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் சிக்கலுக்குக் காரணம் அவர்கள் காணிகளை மீளக் கோராமையேயாகும்.
காணிகளை மீள வழங்குமாறு சிங்களவர்கள் உத்தியோகபூர்வமாக கோரவில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த சிங்களவர்களை புலிகள் விரட்டியத்துள்ளனர்.
காணிகளை மீளக் கோரும் வரையில் காணி அமைச்சு காத்திருப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்காக 6000 தங்கும் அறைகள் ஒதுக்கீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:09.44 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கை அரசாங்கம் 6000 தங்கும் அறைகளை முன்கூட்டியே ஒதுக்கியுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்களுக்கு கொழும்பு மற்றும் கொழும்பின் பெரும்பாக பகுதிகளில் தங்குமிட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாநாடு கொழும்பில் நடைபெறும் நிலையில் துணை நிகழ்வுகள் ஹம்பாந்தோட்டையிலும் தம்புள்ளையிலும் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில் மாநாடு தொடர்பில் குறைந்த செலவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten