தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

பொதுபல சேனாவுக்கு நன்றி செலுத்தும் ஹிஸ்புல்லாஹ்


யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்: கடலில் மூழ்கிய கடற்படைப் படகு!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:30.20 AM GMT ]
யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாகவும் அப்படகிலிருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.net/show-RUmryFScNbiw1.html


பொதுபல சேனாவுக்கு நன்றி செலுத்தும் ஹிஸ்புல்லாஹ்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:00.07 AM GMT ]
பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அதற்காக பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக காத்தான்குடி மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டிருக்கின்றன. அதற்காக பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி செலுத்தவேண்டும்.
பல்வேறு விமர்சனங்களுக்கும் சமுகத்தின் மத்தியில் எழும் கேள்விகளுக்கும் மத்தியில் தான் நாங்கள் சமுகத்திற்காக பணி செய்கின்றோம். அமைச்சுப் பதவிகள் ஒன்றும் எங்களுக்குப் பெரிதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten