சுதந்திரத்தமிழீழம் கானல் நீரல்ல வரலாற்றில் பதியும் உண்மை: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ, கொளத்தூர் மணி, நெடுமாறன் உரை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:37.53 AM GMT ]
சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் புலிகளின் குரல் அந்தணனின் முகவுரையுடன் புலவர் புலமைப்பித்தன், புலவர் மறத்தமிழ்வேந்தன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் இராஜேஷ் ஆகியோரின் வரிகளுடன் உருவான "விடுதலைக்கு மரணமில்லை" ஒலிப்பேழை குறுந்தட்டு வெளியிடப்பட்டது. மதிமுக தோழர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு "பிரபாகரன்" என்று பெயரினை வைகோ அவர்கள் இந்நிகழ்வில் சூட்டினார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை எழும்பூர் பகுதி மதிமுகவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:27.11 AM GMT ]
சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், போர்முடிவுற்ற பின்னர் தமிழர்களின் தாயகத்தில் நினைவிடங்கள் தூபிகள் இடித்தழிக்கப்பட்ட தொடர்ச்சியின் முல்லிவாய்க்களில் உயிர் நீத்த மக்களின் நினைவுதினம் கொண்டாட இருக்கும் சூழ் நிலையில் இச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன்நிறுத்தப்பட வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten