தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள்


திருமலை துறைமுகத்தில் இரண்டு ஜப்பானின் யுத்த கப்பல்கள்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 01:44.51 PM GMT ]
ஜப்பானின் இரண்டு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
சுசுனாமி, கிரிசமி (“Suzunami” ,“Kirisame” )என்ற இந்த இரண்டு கப்பல்களும் நேற்று இங்கு வந்தன. இந்த கப்பல்களில் தளபதிகள் தெற்கிழக்கு கடற்படை பொருப்பாளர் ரோஹான் அமரசிங்கவை சந்தித்து நற்புறவு கலந்துரையாடலை மோற்கொண்டனர்.
சுசுனாமி யுத்தக் கப்பல் 151 மீட்டர் நீளம் கொண்டது. இதில் ஒரு உலங்கு வானூர்தியை தரையிறக்க முடியும். இதே நீளத்தை கொண்ட கிரிசமி யுத்த கப்பலில், இரண்டு உலங்கு வானூர்திகளை தரையிரக்க முடியும்.
இந்த இரண்டு யுத்த கப்பல்களும் நாளை இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:17.44 PM GMT ]
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நேரத்தில், குண்டுவெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?
யாருடைய இலாபத்துக்காக அவர் கொல்லப்பட்டார்? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் இப்போதும் தொக்கி நிற்கும் நிலையில், 21-5-2013 பிற்பகல் மூன்று மணிக்கு "ராஜிவ் கொலையில் விடை தெரியாக் கேள்விகள்" என்ற தொகுப்புக் காணொளி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
இதன் இறுதிப்பகுதியான "தொலைந்து போன சாட்சியங்கள்" என்ற ராஜீவ் கொலை தொடர்பாக மறைக்கப்பட்டிருந்த பல விசயங்களை மக்களுக்கு விரிவாக விளக்குகிறது.
அந்தவகையில் ராஜீவ் கொலை வழக்கின் தூக்குத் தண்டனைக் கைதிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலைக்கு உதவுமா இந்தக் காணொளிகள் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten