தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

13ம் திருத்தச் சட்டத்தினை நீக்குமாறுகோரி தனிநபர் பிரேரணை முன்வைக்க அமைச்சர் சம்பிக்க முடிவு


வவுனியாவில் மாற்றுத்திறனாளியான யுவதியொருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:46.37 PM GMT ]
வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று கனகராயன்குளம் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமத்தில் குறித்த யுவதி வீட்டில் தனியாக இருந்தவேளை, இளைஞனொருவர் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த யுவதியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்ட யுவதி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இதேவேளை நெடுங்கேணி சேனப்பிலவு கிராமத்தில் இடம்பெற்ற 7 வயதுடைய சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தனக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு அப்பிரதேச மக்கள் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

13ம் திருத்தச் சட்டத்தினை நீக்குமாறுகோரி தனிநபர் பிரேரணை முன்வைக்க அமைச்சர் சம்பிக்க முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:28.50 PM GMT ]
அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் நாடாளுமன்ற முறைக்கு மாறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அந்த மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சமூக நீதி பட்டியல் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கின்ற போதும் இலங்கையில் அந்த அதிகாரம் மாகாண சபைக்கு இருப்பதாக சம்பிக்க கூறியுள்ளார். அது மிகவும் அபாயகரமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபை பயன்படுத்தினால் அது பெரும்பான்மை மக்களுக்கு அநியாயத்தையும் நாட்டின் நிர்வாகத்திற்கு அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten