தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையரின் பொது மன்னிப்பு குறித்து கலந்துரையாடல்

யாழ்.குடாநாட்டில் ஐந்து இடங்களை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:46.45 AM GMT ]
யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் அந்தோனியார் ஆயர் இல்லம் உட்பட ஐந்து இடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாற்றுவதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் சாரபிட்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள புராதன குதிரைகள் லயம், கந்தரோடை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கதுருகொட குடியேற்றம், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள புனித மாட்டீனார் மிசனறிக் கட்டிடம் ஆகியனவே புராதன பொருட் கட்டடச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாற்றப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட ஐந்து இடங்களையும் புராதர நினைவுச் சின்னங்களாக மாற்றுவதற்கு ஆட்சேபனைகள் இருப்பின் எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் தொல்பொருள் பணிப்பாளர் தலைமை அலுவலகத்திற்கு எழுத்து மூலத்தில் அனுப்பிவைக்குமாறும் கோரப்பட்டுள்ளது என யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையரின் பொது மன்னிப்பு குறித்து கலந்துரையாடல்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:46.03 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் சவூதி அராபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்காக பொதுமன்னிப்பு காலத்தை நீடித்துக்கொள்ளும் பொருட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி வரை சவூதி அராபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 ஆயிரம் இலங்கையர்கள் வரை சவூதியில் தங்கியுள்ளனர். எனினும், எழுநூறு பேர் வரையே இதுவரை நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏனையவர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு போதுமான காலஅவகாசம் இல்லாத நிலையில், பொதுமன்னிப்பு காலத்தை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten