தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 mei 2013

துபாயினில் அடைக்கலம் புகுந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்! அமெரிக்கா, பின்லாந்து சுவீடனில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது


துபாயில் அடைக்கலம் புகுந்திருந்த இலங்கை தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடனில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துபாயை தலைமையகமாகக்கொண்ட த நெசனல் செய்திதாள் வெளியிட்டுள்ளது

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக டுபாயில் அடைக்கலம் கோரியிருந்தனர். இதில் முன்னர் வன்னியில் ஊடகவியலாளராக செயற்பட்ட பெண் ஊடகவியலாளரும் அடங்கியிருந்தார்.

இவர்,நாடு கடத்தப்படுவார் என்ற அச்சமும் முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மனிதாபிமான அடிப்படையில் டுபாயில் தங்க வைக்கப்பட்டிருந்த 45 தமிழர்;களுக்கும் அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதுத

Geen opmerkingen:

Een reactie posten