தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

மிதவாதிகளை மிதிக்கும் மிலேச்சத்தனம் நிறுத்தப்பட வேண்டும்!- பாஸ்க்கரா


பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கலந்து கொள்வார்: இலங்கை உயர்ஸதானிகரகம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 08:46.06 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்பார் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸதானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு அமைப்புகளும், நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.

எனவே இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை பிரித்தானியா உட்பட்ட நாடுகள் புறக்கணிக்கவேண்டும் என்று கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் குறித்த கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களை சவாலாகக் கொண்டு டேவிட் கெமரோன் இலங்கையில் இடம்பெறும் மாநாட்டில் பங்குபெறவுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு மதிப்பு தந்து அந்த அமைப்பின் கொள்கைகளை வலுப்படுத்தும் முகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்களை கட்டுப்படுத்தமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறாக இலங்கைக்கான விஜயத்தை அந்த நாட்டின் மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள டேவிட் கெமரோன் எண்ணியுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மிதவாதிகளை மிதிக்கும் மிலேச்சத்தனம் நிறுத்தப்பட வேண்டும்!- பாஸ்க்கரா
[ சனிக்கிழமை, 04 மே 2013, 07:54.49 AM GMT ]
அண்மைக்கலாமாக ஜனநாயக கட்சிகளின் தலைவர்கள் தமது மக்களின் குறைகளையும், தமிழ், முஸ்லிம் ஒற்றுமையையும் எடுத்துரைக்கும் போது அவர்களின் செயற்பாட்டை முடக்க அரசு அவர்களை மிதிக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை நிறுத்தவேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
உலக மயமாக்கலில் உலகம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு என்பதை விரும்பும் சூழ்நிலையில் தமது மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்கும் போது அப்பிரச்சனைகளை தீர்க்க அரசு முயல வேண்டும்.
அவ்வேளை நல்லிணக்கத்துக்கான சூழ்நிலை உருவாக்கும்.
அதைவிடுத்து பிரச்சினைகளை தீர்க்காமல் இருப்பதும் அக்குறைபாடுகளை சொன்ன அரசியல் தலைவர்களை மௌனமாக்க முயல்வதும் ஜனநாயக பண்பு கொண்ட நாட்டிற்கு ஏற்புடையதற்றதுடன் நல்லிணக்க சூழ்நிலையை என்றும் ஏற்படுத்தாது அசாதாரண சூழ்நிலைக்கே இட்டுச் செல்லும்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தந்தை செல்வா காலத்து அகிம்சைப் போராட்டத்தை அன்றே அன்றைய அரசு செவிமடுத்திருந்தால், பிற்கால இரத்தக்களரிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
அவ்வரலாற்றுத் தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ஜனநாயக அரசியல் தலைவர்கள் மீதான இம்சை தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வேளையில் நல்லிணக்க அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதான நெருக்குதலை நீக்குவதுடன் அசாத்சாலி அவர்களையும் விடுதலை செய்து நிரந்தர சமாதான சூழ்நிலையை ஜக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்த வேண்டுமென பாஸ்க்கரா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten