யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக திருமதி பவானி பசுபதிராஜா சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டு மீண்டும் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் கடமையாற்றிய பின்னர் மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது யாழ். வைத்திய சங்கத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
இன்றைய தினம் தனது கடமைகளை மிகவும் மகிழ்ச்சியோடு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten