தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 mei 2013

அமெரிக்காவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு !


அமெரிக்காவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னி போர் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த மோதலின் போது 6000 படைவீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். 12000 படைவீரர்கள் ஊனமுற்றனர். இவ்வாறான ஓர் நிலையில் போர் வெற்றியை திசை திருப்பும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
குறிப்பாக படையினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட போர் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் ஓர் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த விசாரணை அறிக்கை பாதுகாப்புச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten