தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் அடிப்படை மனிதஉரிமை வழக்குகள் யாழ். சட்டத்தரணிகளால் தாக்கல்!

இலங்கைக்கு மேலும் நிதியுதவியை சீனா வழங்குகிறது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:06.19 AM GMT ]
இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பு பணிகளுக்காக சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர் செய்தி சேவை இலங்கையின் அரசாங்க அதிகாரி ஒருவரை கோடிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கடன் அடிப்படையில் வழங்கப்படும் இந்த நிதியுடன் இலங்கைக்கு சீனா வழங்கும் கடன் தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்கிறது.
இந்தநிலையில் சீனா, இலங்கைக்கு வழங்கும் இந்த நிதியுதவி இந்திய நலன்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை புதிதாக வழங்கப்படும் 580 மில்லியன் டொலர்களில் 300 மில்லியன் டொலர்கள் வீதி அபிவிருத்திக்கும் 200 மில்லியன் டொலர்கள் நீர் விநியோக பணிகளுக்காகவும் ஒதுக்கப்படவுள்ளது.

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் அடிப்படை மனிதஉரிமை வழக்குகள் யாழ். சட்டத்தரணிகளால் தாக்கல்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:20.10 AM GMT ]
நேற்று புதன்கிழமை இலங்கை உயர் நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமக்கு வெவ்வேறாக சொந்தமாக இருக்கக் கூடிய காணிகள் ஒரே காணியாக கருதப்பட்டு சுவீகரிக்க முடியாது என்றும், அவ்வாறாக சுவீகரிப்பதற்கான பொதுத் தேவை தொடர்பில் தெளிவாகத் தமக்கு கூறப்படவில்லை என்றும், தமக்கு முறையாக தமது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் அறிவித்தல் தரப்படவில்லை என்றும் கூறி இவ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தம் சார்பில் சட்டத்தரணிகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று அறிவித்தல்களைப் பார்வையிடுவதற்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலி வடக்குப் பிரதேசம் ஒருபோதும் சட்ட ரீதியாக உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோக்கம் “முறைப்படி உயர்பாதுகாப்பு வலயத்தை கையளித்தல்” என காணிச் சுவீகரிப்பு அறிவித்தலில் குறிப்பிப்பட்டுள்ளமையில் உள்ள முரண்பாடு தொடர்பில் மனுதாரர்களால் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் குறித்த காணி சுவீகரிக்கப்படும் பகுதிக்குள் இராணுவத்தினர் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது தொடர்பிலும், உல்லாச விடுதிகள் நடத்துவது தொடர்பிலும், யோக்கட் தொழிற்சாலை நடத்துவது தொடர்பிலும் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை மேற்கோள்காட்டி மனுதாரர்கள் இந்நடவடிக்கைகள் எங்ஙனம் பொதுத்தேவைக்கு உரியவை என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேற்படி விடயங்கள் தமது வாழ்வாதரத்திற்கான உரிமையை மீறுவதாகவும் மனுதாரரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி விடயங்கள் அரசியலமைப்பின் உறுப்புரை 12 (1) ல் சொல்லப்பட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையினை மீறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்குகள் எதிர்வரும் யூன் மாதம் 2ம் வாரத்தின் போது வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுகொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான வாதத்திற்கு திகதி இடப்பட்டுள்ளது.
இவ் வழக்குகள் ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் மற்றும் சட்டத்தரணிகளான பாலகிருஸ்ணன் பார்த்தீபன், விஸ்வலிங்கம் திருக்குமரன், குமாரவடிவேல் குருபரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், மற்றும் சுபாஜினி கிஜோர் அன்ரன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten