முள்ளிவாய்க்கால் அஞ்சலி விவகாரம்! கஜேந்திரனிடம் மீண்டும் யாழில் விசாரணை! கஜேந்திரகுமாரிடமும் விசாரணை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 12:30.41 AM GMT ]
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
மேனமுறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட சட்ட மா அதிபருக்கு அதிகாரமில்லை என ஜே.வ.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ் விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியிலுள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு நேற்று நண்பகல் 12.00 மணிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தனர். அதற்கமைய நானும் குறித்த நேரத்திற்கு அவ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.
என்னிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் விசாரித்தனர் என்றார்.
கடந்த 18ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பொழுது குறித்த கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்து குற்றத்தடுப்பு பயங்கரவாதப் பிரிவினரிடம் ஒப்படைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே இன்றும் விசாரணைகள் இடம்பெற்றதாகவும், இவ் விசாரணைகளின் பொழுது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கட்சியின் நிதி நிலைமைகள் தொடர்பாகவும் குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? கஜேந்திரகுமார் உறுப்பினர்களிடம் பொலிஸ் கேள்வி
தமது கட்சியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது மன்னாரில் வைத்து, முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் உட்பட்ட உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களிடம் நிதி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்தநிதிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது உறுப்பினர்களிடம் விசாரணை செய்துள்ளதாக பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நாள்தோறும் இலங்கை பொலிஸில் சமுகமளிக்கவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட சட்ட மா அதிபருக்கு அதிகாரமில்லை!– விஜித ஹேரத்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 12:24.14 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த மனுவில் எந்தவொரு வகையிலும் தொடர்புபடாத சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட முடியாது.
சட்டத்தில் அதற்கான இடமில்லை.
எனவே, சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய வேண்டும்.
முன்னாள் சட்ட மா அதிபர் தொடர்பில் நடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை ரத்து செய்யுமாறு விஜித ஹேரத் கோரியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten