தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம்


தமிழ் மொழியூடாக பௌத்த மதத்தை தெளிவுபடுத்த வேண்டும்!- பாதுகாப்புச் செயலாளர்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:19.03 AM GMT ]
தமிழ் மொழியின் ஊடாக பௌத்த மதத்தை தெளிவுபடுத்த வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் ஊடாக பௌத்த மதச் சிந்தனைகளை போதிக்க பௌத்த பிக்குகள் இன்மையினால், தமிழ் மக்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர்.
இதனால் பௌத்த மதம் பற்றி அவர்கள் சர்வதேச சமூகத்திடம் பிழையான தகவல்களை எடுத்துச் செல்கின்றனர்.
தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் பௌத்த மத சிந்தனைகளை போதிப்பது மிகவும் அவசியமானது.
வடக்கு தமிழ் மக்களிடையே சிங்களவர் பற்றிய பிழையான கருதுகோள்கள் நிலவி வந்தன. அவற்றை முறியடிப்பதற்கு பௌத்த மத சிந்தனைகளை போதிக்க வேண்டியது அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொல்லிகொட பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:21.28 AM GMT ]
வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ள முடியாது.
வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளின் சில தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து இராணுவ முகாம்கள் பற்றி மக்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இராணுவ முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

Geen opmerkingen:

Een reactie posten