[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:09.38 AM GMT ]
சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் சில காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.
புறக்கோட்டை பஸ் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த இருவரும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனா,
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புலிகளுக்கு உதவி வழங்கிய சிங்களவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:11.52 AM GMT ]
பதுளை உயர் நீதிமன்ற நீதவான் சம்பத் பீ.அபேகுணவர்தன இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் மொனராகல் உயர் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீண்ட காலம் விசாரணை நடத்தப்பட்டது.
கிம்புல்யாய என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்சேலாகே திஸாநாயக்க என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணம் செய்யும் பேருந்து மீது குண்டுத் தாக்குதல் நடாத்த முயற்சி செய்ததாகவும், அதற்கான வெடிபொருட்களையும் வைத்திருந்ததாகவும் தெரிவித்து 2009ம் ஆண்டில் திஸாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten