வடக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் தொடர்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வெளியிடும் பல்வேறு கருத்துகள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, 2009ல் போர் முடிவுக்கு வந்த போது யாழ்.குடாநாட்டில் 16 இராணுவ முகாம்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது மூன்று இராணுவ முகாம்கள் மட்டுமே அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தைத் தோற்கடித்து பெறப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்த நாட்டில் எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு வெளிநாட்டவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று விசாரணை அறிக்கைகள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten