தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

காணி, காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை!- கருணாதிலக்க அமுனுகம


மன்னாரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கைதினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!- பா.உ சி.சிறீதரன்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:37.10 PM GMT ]
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் பேசுகின்றவர்  கைது செய்கின்ற அல்லது அச்சுறுத்தி அடக்க முற்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் புதிய செயற்பாடு, அதன் வெளிப்பாட்டையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்னாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிக்காட்டுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று சிறிலங்கா அரசினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக அஞ்சலி நிகழ்வை நடாத்துவதற்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கயேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்ட விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கொத்துக் கொத்தாக எமது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு என வைத்திருப்பதை கண்டிக்கின்றோம்.
இதேவேளை இவர்களோடு பெண்கள் அடங்கலாக 15 கைது செய்யப்பட்டு அவர்களில் சில விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

காணி, காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை!- கருணாதிலக்க அமுனுகம
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:55.28 PM GMT ]
13வது அரசியலமைப்பின், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்ளை விலக்கி கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கோரவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
வெளிவிகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ_டன் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தார்.
எனினும். 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தின் கீழ் உள்ள சரத்துக்களை விலக்கிக் கொள்வது தொடர்பாக எதுவித பேச்சுவார்த்தையும் இடம் பெறவில்லை என கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் இணைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த முறைமை ரத்துச் செய்யக்கோரி எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகளின் அனைத்து தரப்பினரையும் எதிர்வரும் நாட்களில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது என பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடே அரசாங்கத்தின் நிலைப்பாடு என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten