தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 mei 2013

தமிழருக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை!- கி.துரைராஜசிங்கம்


பொதுபல சேனாவின் சவாலை ஏற்றுக்கொள்ள முடியாது: - விமல் வீரவன்ச
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 10:44.54 AM GMT ]
சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் சவாலை ஏற்றுக்கொள்ள தாம் தயாரில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பொதுபல சேனாவுக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் அதனை நிரூபிக்குமாறு பொதுபல சேனா சவால் விடுத்திருந்தது.
பொதுபலசேனா, நோர்வேக்கு சென்று திரும்பிய செய்தி தொடர்பில் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்துக்கு பதிலாகவே பொதுபல சேனா இந்த சவாலை விடுத்திருந்தது
எனினும் தாம் நோர்வேக்கு சென்றதாக பொதுபலசேனா அமைப்பு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செய்தி தொடர்பிலேயே தாம் தமது கண்டனத்தை வெளியிட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழருக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை!- கி.துரைராஜசிங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 10:35.10 AM GMT ]
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் போது சட்டங்களில் திருத்தம் தேவை என்பதை செவிமடுத்து காலத்தின் தேவைக்கென அரசியலமைப்புகளை மாற்றியமைத்தார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவருக்கு நன்மைபயக்கும் வகையில் எந்த அரசியல் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். 
மட்டக்களப்பு வந்தாறுமூலை நிர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தின நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வரலாறுகள் என்பது மிகவும் அவசியமானவை, எமது வரலாறுகள் தெரியாதவர்கள் வெறும் வேடிக்கை மனிதர்களாகத்தான் இருப்பார்கள். வரலாறு என்பதனை உயர்ந்து வாசிக்க வேண்டும், அறியவேண்டும் என்ற உள்ளுணர்வு உள்ளவன்தான் சமுதாயத்திலே உரிமையோடும் உணர்வுள்ள சமுதாயத்திற்கு பலத்தையும் பண்பையும் சேர்த்துக் கொடுக்கின்ற மனிதனாக செயற்பட முடியும்.
அந்தவகையில் தந்தை செல்வாவின் வரலாற்றையும் நாங்கள் திரும்பத் திரும்ப நினைவு கூருகின்றோம்.
கடந்த 30 ஆண்டு ஒரு வீரயுகம் இந்த யுகத்திலே நாங்கள் வரலாறுகளைப் பற்றி கவலைப்படவில்லை. அன்று நடைபெறுகின்ற வீரச் செயல்களை நாங்கள் உள்வாங்கினோம். அந்த வீரச்செயல்களின் மூலம் விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். ஆனால் கண்கெட்ட காலன் நம்முடைய வரலாற்றை பப்படமாக நொருக்கியிருக்கின்றான்.
பல்வேறு தேர்தல்களிலே அரசுக்கு எமது நிலைப்பாடுகளை அகிம்சை வழிகளிலே சொல்லுகின்ற வேளையிலே நாங்கள் வென்றுதருகிறோம் என்று இளைஞர்கள் தங்களுடைய வழியிலே பலத்திலே தங்களுடைய உரிமையைப் பெற்றெடுப்பதற்காக போராடினார்கள். அந்த போராட்டத்தை போராட்டத்தின் அடித்தளத்தை உண்மைத்தன்மை விழைவை அறியாமல் தெரியாமல் வேண்டுமென்றே அலட்சியம் செய்ததன் காரணமாக உண்மையான விடுதலைப் போராட்டமொன்று உலகத்திலே எங்குமில்லாதா வரைவிலக்கணப்படுத்தப்படாத பயங்கரவாதம் என்ற சொல்லை முன்னிறுத்திப் பப்படமாக நொறுக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச சட்டங்கள் வரைந்துகாட்டியிருக்கின்ற போர்முறைகள் முற்றாக புறந்தள்ளப்பட்டு சர்வதேச சட்டங்களை அமுல்நடத்துகின்ற நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது செய்கின்ற நிறைவேற்றல்களையும் புறந்தள்ளி ஒரு இனம் மிகப்பெரிய ஆதிக்க நோக்குடைய பல்வேறு நாடுகளின் காலடியிலே நசுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீரயுக வரலாறு நிறைவுக்கு வந்திருக்கின்ற வேளையிலே நாங்கள் இவைகளிலிருந்து எழுந்து நிற்கின்றோம் நாங்கள் யார் என்று கேட்கின்றோம் அவ்வாறான கேள்விக்கு வீரயுகத்திற்கு முந்திய 30 ஆண்டு கால வரலாற்றை பார்த்திட வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது. அந்த அவசியத்தை நிகழ்வாக மாற்றுகின்ற நிகழ்வாகத்தான் தந்தை செல்வாவின் நினைவு நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
எமது பிரதேசங்களைச் சேர்ந்த சில அன்பர்கள் இறந்தவர்களுக்கெல்லாம் ஏன் விழா எடுகிறார்கள் என கேட்கிறார்கள். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவிற்கு நினைவு விழாவெடுத்தால் அது இறந்தவருக்கெடுக்கின்ற நையாண்டி பண்ணுகின்ற விழாவா? தற்போதைய ஜனாதிபதியின் தந்தையான ராஜபக்சவிற்கு நினைவு விழாவெடுத்தால் அது நையாண்டி பண்ணக் கூடிய விழாவா? பிறேமதாசா அவர்களுக்கு நினைவு விழாவெடுத்தால் அது வெறும் நையாண்டி பண்ணக் கூடிய விழாவா? அப்படி இல்லையென்றால் தந்தை செல்வாவின் நினைவு விழா வெறுமனே இறந்தவருக்கெடுக்கின்ற விழாவா? என நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வெறும் மாயைக்குள்ளே தங்களுடைய வாழ்வை ஒரு மனிதனுடைய வாழ்வாக மட்டும் இந்த உலகிலே நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு சமுதாயத்தின் வாழ்வாக இருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்ட எவரும் எம்முடைய வரலாற்றைத் திருப்பிப் பார்க்க தயங்கமாட்டார்.
எங்களுடைய அரசியல் வரலாறுகளை துக்ககரமான வரலாறுகளை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகத்திலே நியாயத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இனம் இருப்பதென்றால் அது ஈழத் தமிழினம் மட்டுமே. இந்திய சுதந்திரத்திற்கு 100 வருட வரலாறு இருக்கலாம்.
கிழக்கிலே உதிக்கின்ற சூரியன் எங்களைக் கேட்டுத்தான் உதிக்க வேண்டும் என்ற மமதை கொண்ட சாம்ராஜியத்திற்கெதிராக போர். ஆனால் நாங்கள் உள்நாட்டிலே எமக்கு உரிமை வேண்டும் என்று கேட்ட ஒரு போராட்டம்.
பிரித்தானியர்கள் இந்த நாட்டை ஆண்டபோது பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இலங்கை மக்களுக்கு சீர்திருத்தங்கள் தேவை என்ற மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்தார்கள் அதன் நிமிர்த்தம் அரசியல் திருத்தங்களை வந்தன.
ஆனால் 1948ல் வந்த பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் உரிமைகள் மறுக்கச் செய்தார்கள். அதன் காரணமாக நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்களுக்கான உரிமைகளான சமஷ்டி சுயநிர்ணய உரிமை கடைசியாக தமிழீழம் என மக்கள் வழங்கிய ஆணையை இந்த ஆணைகளின் அடிப்படையில் அவ்வப்போது கவனம் செலுத்துகின்ற அரசுகள் தூக்கி குப்பையிலே போட்டுவிட்டு இங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றால் ஜனநாயகம் இல்லை. இங்கு ஜனநாயகம் இருக்கு என்று நம்பிக்கொண்டிருப்பவர்களது வாக்கும் ஜனநாயகமில்லை.
எமது வரலாறு மிகப்பெரிய உண்மையான நியாயமான வரலாறு எமது முன்னோர்கள் வழிநடத்திச் சென்ற வரலாறுகளை எதிர்கால தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமையிலிருக்கின்றோம்.
எமது பிரதேசத்திலே திசைமாறிய பறவைகளாகவிருக்கின்ற எமது அன்புத் தலைவர்களே எமது வரலாற்றைக் கேளுங்கள் எங்களுடைய ஈழத் தாயின் அவல நிலையைப் கேழுங்கள்; இந்த நிலையைக் கேட்டதற்குப் பின்பும் சற்று சிந்தித்துப் பாருங்கள், இதற்குப் பின்பு வரலாறு புரியவில்லை என்றால் வாருங்கள் சொல்லித்தருகிறோம்.
வரலாறு அறிந்ததன் பின்பு நீ யா? என்று சிந்திப்பார் இந்த நாட்டுத் தமிழன் இது இராவணன் ஆண்ட பூமி நாங்கள் வீரம் மிக்க தமிழன் உரிமையை விட்டுக் கொடுக்காத ஒரு பரம்பரையிலே வந்தவர்கள் நாம்.
வடக்கு கிழக்கிலே எமக்கு இருக்கின்ற சுய நிர்ணய உரிமை மிகவும் உணர்வுப+ர்வமாக கேட்டுபார்த்தவர்கள் நாம். அங்கிகரித்துவிட்டு தருகின்றோம் என்று கூறிவிட்டு உறுதிமொழி கொடுத்துவிட்டு அவற்றையெல்லாம் தாக்கி பதில் கொடுத்த தலைவர்களைப் பின்பற்றப்போகிறீர்களா?
பதவிகள் வருமானங்கள் பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எங்களுடைய தலைவர் தந்தை செல்வா அவர்கள் இரண்டு முறை பிரதம நீதியரசரால் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க அழைக்கப்பட்டவர் அதனை அவர் புறந்தள்ளினார். தன்னுடைய சொத்துக்களையெல்லாம் இழந்தார் எமது மக்கள் இந்த நாட்டிலே தங்களுடைய வரலாற்றின் அடிப்படையிலே உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக அவர் எல்லாவற்றையும் துறந்தார். எமது இன்றை தலைவர்களும் அதேபோக்கில் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய தலைவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என இப்போது முளைத்துள்ள தலைவர்கள் கூறுகிறார்கள். ஆம் பிழை விடத் தெரியாதவர்கள். நம்முடைய இனத்துக்காக வழிகாட்டியாக வந்தவர்கள் தங்களுடைய தலைவரின் வழியிலே நேர்மையாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலத்திலே தமிழ் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பட்டிப்பளை கல்லோயாவாக மாற்றப்பட்டு அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனாநயகாவினால் கல்லோயாவிலே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதன் காரணமாகத்தான் அம்பாறையிலே தமிழினம் மிகச் சிறுபான்மையாக்கப்பட்டது.
கிழக்கு மாகாணம் என்பது 1831ம் ஆண்டுகளில் 18052 சதுர கிலோமிற்றர் பரப்பைக் கொண்டிருந்தது. தற்போது கிழக்கு மாகாணத்தில் பரப்பு 9803 சதுர கிலோமீற்றராகவுள்ளது. கிட்டத்தட்ட அரைவாசி நிலம் சுரண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரைபடத்திலே மிக வினோதமான மாகாண வரைபடமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. மாத்தளை, பதுளை, மொனறாகல, அம்பாந்தோட்டை மாவட்டங்களெல்லாம் கிழக்கு மாகாணத்தை துண்டாடியதன் காரணமாக நாங்கள் நிலப்பரப்பு குறைந்தவர்களாக இருக்கிறோம்” என்றர்.

Geen opmerkingen:

Een reactie posten