அப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 19 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ள போதிலும் அவரது முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten