தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

தமிழினிக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை


களனியில் இயங்கி வரும் கப்பக் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 01:47.46 AM GMT ]
களனியில் இயங்கி வரும் கப்பக் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
களனி பிரதேச அபிவிருத்திக்கான அமைப்பு என ஒன்றை நிறுவிக் கொண்டு வர்த்தகர்களிடம் பாரியளவில் கப்பம் கோரப்படுகின்றது.
களனி, கிரிபத்கொட பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்தி மாதாந்தம் லட்சக் கணக்கில் கப்பம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தலைமையிலான குழுவொன்றின் மூலம் குறித்த கப்பல் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கப்பக் கும்பலுக்கு அஞ்சி எவரும் முறைப்பாடுகளை தெரிவிப்பதில்லை.
வர்த்தகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பம் கோருவரை கட்டுப்படுத்துமாறு பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதிகளும் கோரியுள்ளனர்.
கப்பம் கோரல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழினிக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:05.04 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைத் தலைவி தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமிக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினிக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றில் நடைபெற்றது.
2009ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி வவுனியா முகாம் ஒன்றில் தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் முகாம் ஒன்றில் வைத்து கைது செய்திருந்தனர்.
அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் தமிழினியை கைது செய்து நீண்ட காலம் தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் நேற்று புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி வரையில் தமிழினியை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten