தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் பாகங்களை கண்ட படை அதிகாரிகள்!


14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் ‘லயன் எயார் – அன்டனோவ் 24′ ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டன.
வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர்.
jvp--jail1jvp--jail2jvp--jail3jvp--jail4jvp--jail5jvp--jail6jvp--jail7jvp--jail8jvp--jail9jvp--jail10jvp--jail11jvp--jail12jvp--jail13jvp--jail14jvp--jail15

Geen opmerkingen:

Een reactie posten