தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 26 பேரின் வழக்கு யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றம் !


நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்பரப்பினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரின் வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த மாதம் 6ம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த தமிழக மீனவர்கள் 26 பேரும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிபதி ஆர். மகேந்திரராஜாவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் 26 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கு விசாரணைகளை யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten