யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் 20 பேர் படுகாயம்!
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை நல்லூரிற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணம் செய்த 20 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. எனினும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தே உழவு இயந்திரம் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/26842.html
54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம்! 6000 தங்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன
54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.எதிர்வரும் நவம்பர் மாதம் 15, 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூனின் இலங்கை விஜயத்தை தடை செய்ய தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15, 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை அரசாங்கம் 6000 தங்கும் அறைகள்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கை அரசாங்கம் 6000 தங்கும் அறைகளை முன்கூட்டியே ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்களுக்கு கொழும்பு மற்றும் கொழும்பின் பெரும்பாக பகுதிகளில் தங்குமிட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாநாடு கொழும்பில் நடைபெறும் நிலையில் துணை நிகழ்வுகள் ஹம்பாந்தோட்டையிலும் தம்புள்ளையிலும் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில் மாநாடு தொடர்பில் குறைந்த செலவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten