தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் 42 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!


இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் 42 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு நடத்தப்பட்டுள்ளனர்.
விசேட விமானமொன்றின் மூலம் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 39 பேர் தமிழர்ளும், 3 பேர் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்டவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த அகதிக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர்.
இவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten