தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனக்கு எதிரான செய்தி குறித்து மறுப்பறிக்கை!


60 அலகு வரையான மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது! மேதின கூட்டத்தில் ஜனாதிபதி
[ புதன்கிழமை, 01 மே 2013, 03:46.56 PM GMT ]
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் 60 அலகு வரையிலான மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத அதேவேளை 180 அலகு வரையிலான மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு, கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பிரதான கூட்டம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  தலைமையில் நடைபெற்றது.
‘நாட்டை கட்டியெழுப்பும் மே தின அலை’ என்ற தொனிப் பொருளில் இன்று நடைபெற்ற இன்றைய கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.
60 அலகு வரை மின்சாரத்தை பயன்படுத்துவோரின்  கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் 180 அலகு வரை பயன்படுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.
ஐ. ம. சு.மு பிரதான கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டனர்.

மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தனக்கு எதிரான செய்தி குறித்து மறுப்பறிக்கை
[ புதன்கிழமை, 01 மே 2013, 06:00.10 PM GMT ]
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் இன, மத பேதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் எனது நடவடிக்கை தொடர்பில் கடற்தொழில் அமைப்போ, மீனவர்கள் அமைப்போ குறைகூறவில்லை என மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
சமூக சிந்தனையுடன் செயற்படும் அதிகாரியாக நான் செயற்பட்டுவரும் வேளையில் என் தொடர்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் எனது முழு மறுப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தமிழ்வின் செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு வாவியின் மீன்வளம் சுயநலம் கொண்ட சிலரின் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் (தங்கூசி வலைகள், முக்கூட்டு வலைகள், இழுவை வலைகள்) காரணமாக அருகி வருகின்றது. காணப்படும் 112 இனங்களில் 28 வகையான இனங்கள் அருகிவிட்டது. இதன் காரணமாக வீச்சு வலைகள், சட்ட ரீதியான மீன்பிடி உபகரணங்கள் கொண்டு தமது ஜீவனோபாய தொழிலை செய்யும் 11500 ஏழை மீனவக் குடும்பங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மாவட்ட கடற்றொழில் அமைப்பு மற்றும் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு கருத்தரங்குகள் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மீனவர்களுக்கு மீன்வளத்தை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றோம். அத்துடன் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக வாவி ஒழுங்கு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கின்றோம். 2010ஆம் ஆண்டு முதல் 150வழக்குகள் நீதிமன்றத்தில் பதியப்பட்டு 25 மில்லியனுக்கு மேற்பட்ட சட்ட விரோத வலைகள் அழிக்கப்பட்டன.
இந்நடவடிக்கையில் இன, மத பேதமின்றி காத்தான்குடி, மண்டூர், கல்லடி, ஏறாவூர், வாகரை போன்ற வாவிப் பிரதேசங்களில் மீனவர்களின் ஒத்துழைப்போடு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கின்றோம். ஏந்தவொரு கடற்றொழில் அமைப்போ மீனவர்களோ இந் நடவடிக்கையை குறை கூறவில்லை.
எமது மாவட்டத்திற்கு 430மில்லியன் ரூபா செலவில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத் தொகுதி மீள அமைக்கப்பட்டது. இதனால் மூவின மக்களும் பயன் பெறுகின்றனர்.
அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் பல்வேறு உதவித் திட்டங்கள் அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் அமைப்புகள், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அனுசரணையுடனேயே வழங்கப்பட்டு வந்துள்ளது.
சர்வதேச விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் 6 மீனவர் இறங்கு துறைகள் காத்தான்குடி, பேத்தாளை, வாகரை, களுவன்கேணி, பாலமீன்மடு, கல்லாறு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. மீனவ மக்களின் பரம்பல், தேவை, அபிவிருத்தி கருதியே அமைக்கப்பட்டன.
கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு மற்றும் திணைக்கள திட்டத்தின் எகெட், இந்திய அரசு உதவித் திட்டங்களில் யுத்தத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகி மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் யுத்தத்தாலும் சுனாமி அனர்த்தத்தாலும் பல தடவை பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நிர்க்கதியாக வாகரை, பட்டிப்பளை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் மண்முனை மேற்கு பிரதேச மீனவர்களுக்கு பல மில்லியன் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன.
கிராமிய கடற்றொழில் அமைப்புகள் 130 உருவாக்கப்பட்டன. வாகரை பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் படகுகளின் பதிவு உரிமைப் பத்திரம் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் பெயரில் பதியப்பட்டுள்ளன.
சகல மீனவர்களும் ஏற்றத் தாழ்வின்றி மீன்பிடியில் ஈடுபடுவதோடு தமிழ் மீனவர்கள் ஏனைய சமூகங்களுடன் தலை நிமிர்ந்து வாழும் வகையில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளேன்.
எமது திணைக்களத்தின் நோக்கம் சகல இன மக்களும் சகோதரத்துவமான முறையில் தொழில் புரிவதேயாகும். யாரும் வந்து இதனை பரிசீலிக்கலாம். எமது மாவட்ட அலுவலக நேரத்தில் மேற்படி விடயம் சம்பந்தமான சந்தேகத்தினை தீர்த்துக் கொள்ளலாம் என பகிரங்க அழைப்பு விடுக்கின்றது.
பல தசாப்தங்களாக தென்னிலங்கை மீனவ முதலாளிகளிடம் தங்கியிருந்து கூலித் தொழிலாளர்களாக இருந்த எமது மீனவ மக்கள் 1600 இயந்திரப் படகுகளுக்கும் 85 கரை வலைகளுக்கும் உரிமையாளராகி நவீன தொழினுட்பத்துடன் தொழில் புரிகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி

Geen opmerkingen:

Een reactie posten